Actor Vijay Movie The GOAT Box Office Collection Day 1 official Report: விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் திரைப்படம், ஒரேநாளில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. லியோவை தொடர்ந்து விஜய் நடித்த திரைப்படம் கோட் என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
விஜய் ரசிகர்களுக்கான பக்கா கமர்சியல் ஜானர் மூவியாக உருவாகியுள்ளது கோட். இதனால் கோட் மட்டும் சிங்கிளாக வெளியாகட்டும் என மற்ற படங்கள் எதுவும் நேற்று (செப்.5) ரிலீஸாகவில்லை. பொதுவாகவே ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்கள் சிங்கிளாக ரிலீஸாகி வருகின்றன. அப்போது தான் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் படத்தின் பட்ஜெட்டை வசூலிக்க முடியும். அதன்படி நேற்று வெளியான கோட், முதல் நாளிலேயே 100 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்து மரண மாஸ் காட்டியுள்ளது.
முன்னதாக கோட் திரைப்படம் முதல் நாளில் (Goat Box Office Day 1) 60 முதல் 70 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. விஜய் நடிப்பில் வெளியான லியோ, முதல் நாளில் 142 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால், கோட் திரைப்படம் லியோவின் சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்பட்டது. இந்நிலையில், கோட் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, கோட் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் (The Goat Box Office Collection) 126.32 கோடி ரூபாய் என படக்குழு தனது டிவிட்டர் பக்கத்தில் அபிஸியலாக தெரிவித்துள்ளது. இது லியோ முதல் நாள் வசூலை விட குறைவு தான் என்றாலும், இந்தாண்டு வெளியான படங்களில் கோட் தான் நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது. கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2, முதல் நாளில் 26 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இந்தியன் 2 வசூல் படுமோசமானது.
மேலும் படிக்க - நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு... உண்மை வெளிவந்தது!
இந்நிலையில், கோட் படத்தின் அபிஸியல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் முதல் நாளில் 126 கோடி கலெக்ஷன் செய்துள்ள கோட், அடுத்தடுத்த நாட்களிலும் தரமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கோட் படம் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் முதல் வாரத்திலேயே, அதாவது முதல் நான்கு தினங்களில் கோட் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 500 கோடி ரூபாயை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.