Nivin Pauly: நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு... பிரபல இயக்குநரின் ஸ்டேட்மெண்ட்டால் பரபரப்பு!
மலையாள நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்ததை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டை நிவின் பாலி மறுத்திருந்த நிலையில், தற்போது பிரபல இயக்குநர்கள் கொடுத்துள்ள ஸ்டேட்மெண்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி துபாய் அழைத்துச் சென்ற நிவின் பாலி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்ததாக அந்த பெண் புகாரளித்திருந்தார். ஏற்கனவே நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை, மலையாள திரையுலகில் பெரும் புயலை கிளப்பியது. அதோடு மலையாள நடிகர் சங்கமான (AMMA) நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
அதேநேரம் நிவின் பாலி மீதும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து நிவின் பாலி மீது எர்ணாகுளத்தில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நிவின் பாலி, உடனடியாக இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வெளியான பொய் செய்தியை பார்த்தேன். இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. இதனை ஆதரமற்றது என நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன். மேலும் உண்மையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன், அதோடு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதனையடுத்து நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டும் மலையாள திரையுலகில் விஸ்வரூபம் எடுத்தது. இந்த பிரச்சினையில் நிவின் பாலிக்கு ஆதரவாக பிரபல இயக்குநர்கள் இருவர் கருத்துத் தெரிவித்துள்ளனர். நிவின் பாலி நடிப்பில் ஓம் சாந்தி ஒஷானா, ஒரு வடக்கன் செல்ஃபி, ஜேக்கபிண்டே சுவர்க்கராஜ்ஜியம், லவ் ஆக்ஷன் ட்ராமா போன்ற படங்களை இயக்கியவர் வினீத் ஸ்ரீனிவாசன். நிவின் பாலி – வினீத் ஸ்ரீனிவாசன் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில் தான் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு உண்மையில்லை என வினீத் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதாவது, நிவின் பாலி டிசம்பர் 14, 15ம் தேதிகளில் கொச்சியில் நடைபெற்ற ஃபார்மா வெப் சீரிஸின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார். அதேநாளில் அவர் துபாயில் இருந்ததாகவும், தனக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாகவும் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். நிவின் பாலி கொச்சியில் இருந்த அதேநேரத்தில், எப்படி துபாயில் உள்ள பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். வினீத் ஸ்ரீனிவாசனின் இந்த ஸ்டேட்மெண்ட் உண்மை என்பதை இயக்குநர் அருணும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க - 18 வயதில் செக்ஸ் அடிமை... பிரபல நடிகைக்கு நடந்த சோகம்!
இதனால் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய் என அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேநேரம் தன் மீதான குற்றச்சாட்டு பொய் என்பதை கண்டிப்பாக நிரூபிப்பேன் எனக் கூறியுள்ள நிவின் பாலி, இதனை சட்ட ரீதியாக சந்திக்கவும், எதிர் நடவடிக்கை எடுக்கும் முடிவிலும் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?