Raayan Movie Review : ராயன் விமர்சனம் சுடச்சுட... தனுசின் 50வது படமான ராயன் எப்படி இருக்குது.?
Actor Dhanush Raayan Movie Review in Tamil : கிளைமாக்சும் சப்பென முடிகிறது. பிரகாஷ் மாறப்போகிறார், வரலட்சுமி மாறப்போகிறார். தம்பிகளின் கேரக்டரி்ல் டிவிஸ்ட் வரப்போகுது, ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று பார்வையாளர்கள் நினைப்பது கடைசிவரை நடக்கவே இல்லை.
Actor Dhanush Raayan Movie Review in Tamil : தனுஷ் நடித்த 50வது படம் ராயன், அவரே படத்தை இயக்கி இருப்பது கூடுதல் சிறப்பு. எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷாராவிஜயன், பிரகாஷ்ராஜ் நடிப்பு, ஏ.ஆர்.ரகுமான் இசை என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயன் படம் எப்படி? தனுசுக்கு வெற்றியா? தோல்வியா? இது, சுடச்சுட விமர்சனம்.
அம்மா, அப்பா திடீரென காணாமல் போக, இரண்டு தம்பி, கைக்குழுந்தையான தங்கையுடன் நெல்லையில் இருந்து சென்னைக்கு வருகிறார் காத்தவாரயன் என்ற தனுஷ். சென்னை காய்கறி மார்க்கெட்டில் அவருக்கு செல்வராகவன் அடைக்கலம் கொடுக்க, ராயன் குடும்பம் வளர்கிறது. பாஸ்ட் புட் கடை நடத்திக்கொண்டு தங்கை துஷாராவின் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் தனுசுக்கு முதல் தம்பி சந்தீப் கிஷன் மூலமாக சிக்கல் வருகிறது. டாஸ்மாக் பாரில் நடந்த ஒரு மோதலில் பிரபல தாதா பருத்திவீரன் மகன் கொல்லப்படுகிறான். அதற்காக, தனுஷ் தம்பியை கொல்ல தாதா துரத்த, தனுஷ் என்ன செய்தார். பிற்பாதியில் இன்னொரு தாதா எஸ்.ஜே. சூர்யா தனுசை கொல்ல திட்டம் போட என்ன நடக்கிறது. அவர் தம்பி, தங்கை நிலை என்ன என்பதை கொஞ்சம் வன்முறை கலந்து ராவாக ‘ராயனை’கொடுத்து இருக்கிறார் தனுஷ்.
தனுஷ் சின்ன வயது பிளாஷ்பேக், சென்னையில் தம்பிகளின் பின்னணி, அவர்கள் வசிக்கும் ஏரியாவில் இருக்கு ரவுடியிசம், போட்டி, பகை, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி காதல் என்று கதை என முதற்பாதி கொஞ்சம் வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதி கொலை, பழிவாங்கல், துரத்தல், திருப்பம் என்று வேறு மாதிரி பயணிக்கிறது. 50வது படம் என்றாலும், பெ ரிய பில்டப் , ஓபனிங் பாடல் இதெல்லாம் இல்லாமல் சிம்பிளாக அறிமுகம் ஆகிறார் தனுஷ். முதற்பாதியில் அவருக்கான வசனங்களும் குறைவு, சற்றே மொட்டை அடித்த மாதிரியான கெ ட்டப்பில், புது லுக்கில் மிரட்டுகிறார். என்ன சில சமயம், ஆடுகளம் கிஷோர் மாதிரி தெரிவது மை னஸ். இந்த படத்தில் அவருக்கு ஜோடி இல்லை என்பது கூடுதல் தகவல். பாசம் கோபம், ஆக் ஷன் என நடிப்பில் தனுஷ் குறை வைக்கவில்லை.
முதற்பாதியில் தனுஷ் மூத்த தம்பியாக வரும் சந்தீப்கிஷன் காட்சிகள், அவரின் காதல், அபர்ணாபாலமுரளி டான்ஸ் ஆகியவை படத்துக்கு பலம். கொஞ்சம் வெ யிட்டாக இருந்தாலும் வெ யிட்டாக மனதில் பதிகிறார் அபர்ணா. வன்முறை, கொலை, பழிவாங்கல் தொடங்கியுவுடன், இரண்டாம்பாதியில் இருந்து கதை சூடுபிடிக்கிறது. ஆனாலும், முதற்பாதியில் இருந்த விறுவிறுப்பு, பரபரப்பு இரண்டாம்பாதியில் மிஸ்சிங்.
மேலும் படிக்க : தனுஷின் 50வது படம் சாதனையா சோதனையா..? ராயன் டிவிட்டர் விமர்சனம்!
பருத்திவீரன் சரவணன், எஸ்.ஜே. சூர்யா என இரண்டு வில்லன்கள், போலீஸ் அதிகாரியாக பிரகாஷ்ராஜ் வருகிறார். இதில் எஸ்.ஜே. சூர்யாதான் கலக்குகிறார். தனுஷ், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மாஸ். தமிழ்சினிமாவில் தாதாக்களை இரண்டு பொண்டாட்டிகாரர்களாக காண்பிப்பது வழக்கம். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் அப்படியே. முதல் மனைவியாக வரும் வரலட்சுமி சில சீன்களில் வந்தாலும், அதிக டயலாக் பேசாவி்ட்டாலும் கிடைத்த வாய்ப்பில் கலக்குகிறார். ஆனாலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் எதிர்பார்த்தது நிறைய.
பெ ரிய போலீஸ் ஆபிசராக பிரகாஷ்ராஜ் வருகிறார். அதை செய்யப்போகிறார், இ்ப்படி மாறப்போகிறார் என நாம் நினைத்தால் அதில் ஏமாற்றமே. தனுசின் தங்கையாக வரும் துஷாரா இரண்டாம்பாதியில் பல எமோஷனன் சீன்களில், ஆக் ஷன் காட்சிகளி்ல் மிரட்டியிருக்கிறார். அந்த ஆஸ்பிட்டல் சீன், கிளைமாக்ஸ், தம்பிக்கு கொடுக்கும் பரிசு என சிறப்பாக நடித்து இருக்கிறார். தன்னை அறிமுகப்படுத்திய செல்வராகனுக்கு நல்லதொரு கே ரக்டர் கொடுத்து, அவரை சிறப்பாக நடிக்க வைத்து நன்றி கடன் செலுத்தியிருக்கிறார் தம்பி தனுஷ். அவர் கேரக்டர் நிறைவு. காளிதாஸ் நடிப்பு ஓகே ரகம்.
தாதாயிசம், வன்முறை படம் என்பதாலோ என்னவோ அதற்கான டார்க் டோனில் அதிக காட்சிகளை எடுத்து இருக்கிறார்ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், கிளைமாக்ஸ் பாடல், காட்சிகள் ரசிக்க வை க்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை, குறிப்பாக பின்னணி இசை படத்துக்கு பெரிய பிளஸ். அதுதான், கதையை துாக்கி நிறுத்துகிறது. ஆனால், பாடல்கள் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. அந்த கிளைமாக்ஸ் சாங், கதையுடன் ஒட்டவில்லை. பீட்டர்ஹெய்ன் டீம் சண்டைக்காட்சிகள் அருமை. ஆனால், தனுஷ் கை யில் வை த்துஇருக்கும் ஆயுதம். கொ த்து கொத்தாக வில்லன் டீம் சாவது, போலீஸ் பாரமுகம் இதெல்லாம் மைனஸ்.
தம்பி, தங்கைக்களுக்காக ஆக் ஷனில் களம் இறங்கும் பாசக்கார அண்ணன் கதை என்றாலும், ஒரு கட்டத்தில் தம்பி, தங்கை களின் கே ரக்டர் மாறுவது, சில சீன்கள் ஏற்கும்படி, ரசிக்கும்படி இல்லை என்பது படத்தின் பெரிய மை னஸ். குடும்ப உறவுகளின் வலிமை, பிணைப்பை சொல்லாமல், அதில் உள்ள முரணை கதையில் கொண்டு வந்தது, தம்பிகளின் மாற்றம் ஆகியவை ராயனை பின்னோக்கி இழுத்து செ ல்கின்றன அல்லது தம்பிகள் மாறியதற்கு வலுவான காரணத்தை சொல்லவில்லை. ஒ ளிப்பதிவும் அதிக டார்க்கில், இரவில் அதிகம் நடப்பது சலிப்பு
நடிகராக சில சீன்களின் ஸ்கோர் செய்த தனுஷ், இயக்குனராக திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார்.அதிகமான வன்முறை, கதையமைப்பு, திரைக்கதை வீக் போன்றவை குடும்பத்துடன் ரசித்து பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்துகின்றன. கிளை மாக்சும் சப்பென முடிகிறது. பிரகாஷ் மாறப்போகிறார், வரலட்சுமி மாறப்போகிறார். தம்பிகளின் கேரக்டரி்ல டிவிஸ்ட் வரப்போகுது, ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று பார்வையாளர்கள் நினைப்பது கடைசிவரை நடக்கவே இல்லை.
தனுசின் சின்ன வயது பிளாஷ்பேக்கில் அம்மா, அப்பாவுக்கு என்ன ஆனது, செ ன்னையில் அவர் செ ய்த சம்பவ பில்டப், இறுகமாக இருப்பதற்கான பின்னணி ஆகியவை விரிவாக சொல்லப்படவில்லை. தம்பி, தங்கை பாசத்தை இப்படி வன்முறைக்கு மாற்றியதும் நெருடல். குடும்பத்துடன் பார்த்து ரசிக்க முடியுமா? சுருக்கமாக சொன்னால் வடசென்னை பாணியில் படமெடுத்து ராயனி்ல் வெ ற்றிமாறன் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார் தனுஷ். ஆனால், அது நடக்கவில்லை என்பது நிஜம்.
சரி,50வது படத்துல என்ன மெசேஜ் சொல்ல வர்றீங்க தனுஷ். அண்ணன், தம்பி , அண்ணன், தங்கை பாசத்தை இப்படி சுயநல, தவறான பாதைக்கு கொண்டு செல்வது சரியா?
What's Your Reaction?