பாஜக வளர்ச்சிக்கு விஜய் உதவி.. திமுகவின் பி டீம் அதிமுக.. பாயிண்டை பிடித்த அண்ணாமலை

எந்த வித ஆதாரமும் இன்றி நீட் தேர்வை எதிர்க்கக் கூடாது. புள்ளி விவரங்களோடு நீட் தேர்வு குறித்து வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நீட் தேர்வு தேவையில்லை என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக தவெக தலைவர் விஜய் கூறிய நிலையில் அதற்கு பதில் அளித்துள்ளார் அண்ணாமலை.

Jul 4, 2024 - 13:46
 0
பாஜக வளர்ச்சிக்கு விஜய் உதவி.. திமுகவின் பி டீம் அதிமுக.. பாயிண்டை பிடித்த அண்ணாமலை

தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் மாணவர்களுக்கு பரிசளித்து பேசும் போது, நீட் என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளது.1975 ஆம் ஆண்டு கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது இது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அதன்பிறகு ஒன்றிய அரசு வந்த பிறகு அது பொது பட்டியலில் சேர்த்தார்கள்.அது தான் முதல் பிரச்சினையாக இருந்தது. ஒரே நாடு ஒரே பாடத்திட்டங்கள் ஒரே தேர்வு அடிப்படையில் கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரான விஷயமாக நான் பார்க்கிறேன்.

மாநில உரிமைகளுக்கு மட்டும் நான் இதை கேட்கவில்லை. பன்முகத்தன்மை என்பது பலம் தானே தவிர பலவீனம் கிடையாது.மாநில சிலபஸ்ல படித்துவிட்டு என்சிஇஆர்டி சிலபஸ்ல தேர்வு வைத்தால் அது எப்படி? கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு கடினாமான விசயம். மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது அதில் சில குளறுபடிகள் நடந்தது என்பதை செய்திகளில் பார்த்தோம். அதன் பிறகு நீட் தேர்வின் மீதான நன்பக  தன்மையே மக்களுக்கு சுத்தமாக போய்விட்டது...நீட் தேர்வு நாடு முழுவதும் தேவையில்லை என்பது தான் நாம் புரிந்து கொண்ட ஒன்று.நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு காலம் தாமதம் செய்யாமல் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதனை சீக்கிரமாய் சரி செய்ய வேண்டும்.கல்வியை பொதுப்பட்டியிலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதுதான் இதற்கு நிரந்தர தீர்வு என்று தெரிவித்தார். 

இந்த நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, நீட் குறித்து பேச விஜய்க்கு உரிமை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக கூட நீட் தேர்வுக்கு எதிராகதான் உள்ளது. நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் அதற்கான புள்ளி விவரங்களை வைத்து பேசினால் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ கல்லூரிக்கு சென்றனர் என்பது பற்றி அரசு தர மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

திமுக சார்ந்த அரசியலை விஜய் கையிலெடுத்தால் சந்தோஷம் அது எங்களுக்கு நல்லதுதான். தமிழ்நாட்டில் எங்களுடைய கட்சி மேலும் வளர்ச்சியடையும்.
நீட் தேர்வு தொடர்பாக இன்னும் பல தரவுகளை வைத்துக்கொண்டு விஜய் பேச வேண்டும்.திமுக சார்ந்த கொள்கையுடன் விஜய் பேசியது பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும். பாஜக மட்டும் தனித்திருக்கும்.

இருமொழிக் கொள்கை, நீட் தேர்வு எதிர்ப்பு என எல்லா கட்சிகளும் வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். பாஜக மட்டும் மும்மொழிக் கொள்கை, நீட் ஆதரவு என தெளிவான கொள்கையுடன் பயணிக்க உள்ளது. இருமொழிக் கொள்கையை தாண்டி 3வது மொழியை மக்கள் விரும்புகின்றனர் என்று கேட்கின்றனர்.
இந்தி மொழி கட்டாயம் என்பது கல்விக்கொள்கை அதை திமுக அரசு ஏற்கவில்லை.குலக்கல்வி பற்றி மாநில அரசு கல்விக்கொள்கையில் உள்ளது என்றார். 

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அதிமுகவை கடுமையாக சாடினார். அதிமுகவின் பி டீம் ஆக அதிமுக செயல்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 'ஏ' டீம் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 'பி' டீம் அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கிறார்கள், பிரசாரத்தின் வாயிலாக அதனை மறுபடியும் நிரூபித்து இருக்கிறார்கள். அண்ணாமலை வெளியே போய்விட்டால் அதிமுக இழந்த இடத்தை பிடித்து விடலாம் என எண்ணுவது பகல்கனவு அண்ணாமலை இல்லாவிட்டாலும் வேறு யாராவது வந்து பாஜகவை வளர்பார்கள். ஜெயக்குமாரும், முனுசாமியும் செய்தியாளர் சந்திப்பு நடத்துவதால் அதிமுக அழிந்துகொண்டுதான் இருக்கும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow