“கர்ப்பமானால் பொறுப்பேற்க முடியாது” - ஒப்பந்தம் போட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்

Mumbai Live In Relationship Case News in Tamil : மும்பையில் பாலியல் பலாத்கார வழக்கில், இளம்பெண் தன்னுடன் செய்துகொண்ட 7 நிபந்தனைகள் அடங்கிய, திருமண ஒப்பந்தத்தை காட்டி ஜாமின் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sep 4, 2024 - 22:17
Sep 5, 2024 - 01:45
 0
“கர்ப்பமானால் பொறுப்பேற்க முடியாது” - ஒப்பந்தம் போட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்
Mumbai Live In Relationship Case News in Tamil

Mumbai Live In Relationship Case News in Tamil :: நடிகர் விஜய், நடிகை சிம்ரன் நடிப்பில், கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘பிரியமானவளே’. அதில், திருமணத்தின் மேல் நம்பிக்கையே இல்லாத விஜய், தந்தையின் வற்புறுத்தலால், சிம்ரனுடன் நிபந்தனைகளுடன், ஒப்பந்தம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஈடுபடுவார்.

அதேபோன்று ஒரு உண்மை சம்பவம் மும்பையில் நடந்தேறியுள்ளது. தனது இணையர் (46 வயது) பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 29 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அரசு ஊழியராக அந்த நபர், பராமரிப்பாளராக பணியில் சேர்ந்த தன்னை, ஏமாற்றியுள்ளதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த அரசு ஊழியர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும், இதனையடுத்து ஒன்றாக வாழ்ந்த காலத்தில் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுனில் பாண்டே, இருவரும் சேர்ந்து செய்துகொண்ட ஒப்பந்தைத்த காட்டி ஜாமின் பெற்றுள்ளார்.

இது குறித்து கூறிய அவர், "விண்ணப்பதாரர் வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர். அவர்கள் லிவ்-இன் உறவில் [Live-in Relationship Case] இருந்தனர். இருவரும் உறவில் ஈடுபட ஒப்புக்கொண்டதை ஒப்பந்தம் காட்டுகிறது. அவர்கள் இருவரும் உறவில் இருக்க ஒப்புக்கொண்டதை இந்த ஒப்பந்தம் காட்டுகிறது. இது குறித்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தில், அந்த பெண் கையெழுத்திட்டு உள்ளார்” என்று கூறினார்.

இருவருக்கும் இடையிலான ஏழு அம்ச ஒப்பந்தத்தின்படி, ஆகஸ்ட் 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரை ஒன்றாக இருக்க முடிவு செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில், அவர்கள் ஒருவருக்கொருவர் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை பதிவு செய்ய மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், பெண் ஆணுடன் அவனது வீட்டில் வாழ்வாள் என்றும், அவனது நடத்தை பொருத்தமற்றதாகக் கண்டறியப்பட்டால், ஒரு மாத நோட்டீஸ் கொடுத்து எந்த நேரத்திலும் அவர்கள் பிரிந்துவிடலாம் என்றும் பெண்ணின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு வர முடியாது என்றும் ஒப்பந்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முக்கியமாக, பெண் ஆணுக்கு எந்தவிதமான தொல்லைகளையும் மன வேதனையையும் ஏற்படுத்தக்கூடாது என்றும் இந்தக் காலக்கட்டத்தில் பெண் கருவுற்றால் அதற்கு ஆண் பொறுப்பேற்கக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ஆணுக்கு மன உளைச்சலை உண்டாக்கி, அதன் மூலம் அவனது வாழ்க்கையைப் பாழாக்கினால், அந்தப் பெண்ணே பொறுப்பாவாள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண், தான் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும், ஆவணத்தில் உள்ள கையெழுத்து தன்னுடையது அல்ல என்று மும்பை(Mumbai) நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், இந்த ஆவணங்கள் பொய்யாக தயாரிக்கப்பட்டு உள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow