Rat Fever Death in Kerala : எலிக்காய்ச்சல் பரவல்.. 8 மாதங்களில் இத்தனை பேர் உயிரிழப்பா..!!
Rat Fever Death in Kerala : கேரளாவில் 8 மாதங்களில் எலிக் காய்ச்சலால் 121 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரளாவில் 8 மாதங்களில் எலிக்காய்ச்சலால் 121 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Rat Fever Death in Kerala : கேரளாவில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதிலிருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இதனால் பருவமழை தீவிரமடைந்து பல மாவட்டங்கள் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள்.
மேலும், வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை கிராமங்களில் கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு மற்றும் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் இரண்டு கிராமங்களும் முற்றிலுமாக அழிந்தது. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 1000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் 400க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோனது. இதில் 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்பதே தெரியாமல் இருக்கிறது.
கேரள அரசின் தரவுகள் படி, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 225 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 119 பேரின் நிலை என்ன என்பதே தெரியாமல் இருக்கிறது. இப்படி சொந்த பந்தகளை இழந்த துயரில் இருந்து மீளாமல் இருக்கும் கேரள மக்களை இன்னும் வாட்டி வதைப்பது போல் தான் தற்போது இந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, கேரளாவில் இந்தாண்டில் மட்டும் இதுவரை 121 பேர் எலி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் இருக்கும்படி மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதைத் தவிர, 1,935 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2022ல் இந்த காய்ச்சலுக்கு 93 பேரும், 2023ல் 103 பேரும் கேரளாவில் பலியாகி உள்ளனர். ஆனால், இந்தாண்டு இன்னும் எட்டு மாதங்களே முடிவடையாத நிலையில், 121 பேர் பலியாகி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எலிக் காய்ச்சல் பாதிப்பு மற்றும் அதனால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கவனமுடனும், விழிப்புடனும் இருக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
எலிக்காய்ச்சல் பரவலும், அறிகுறிகளும்:
ஸ்பைரோகீட்ஸ் என்ற சுருள்வடிவ பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் நமது உடலில் படும்போதும், பாக்டீரியா கிருமிகள் கலந்த தண்ணீரைக் குடித்தாலும், பாதிக்கப்பட்ட விலங்குகள் கடிப்பதாலும் எலிக் காய்ச்சல் ஏற்படும். மாடு, பன்றி, எலி, நாய் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எலிக் காய்ச்சல் பரவும். ஆனால், ஒரு மனிதரிடன் இருந்து இன்னொரு மனிதருக்கு இந்த பாக்டீரியா பரவாது.
மேலும் படிக்க: இனி "கேப்டன் ஆலயம்".. பெயர் மாற்றம் பெற்ற தேமுதிக தலைமை அலுவலகம்
இந்த கிருமி உடலுக்குள் நுழைந்த ஏழு முதல் பன்னிரெண்டு நாட்கள் கழித்தே எலிக் காய்ச்சல் நோயின் அறிகுகள் தோன்றும். முதல் வாரத்தில் குளிர்க்காய்ச்சல், நடுக்கம், தலைவலி, நடுக்கம், உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்து போதல், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
What's Your Reaction?






