ஒரு கிராமத்தையே அலற விடும் 2 ஓநாய்கள்.. 8 பேரை கடித்துக் கொன்றன.. பீதியில் உறைந்த மக்கள்!

இந்த ஓநாய்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி உத்தரப்பிரதேச அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளன. ''வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தவறி விட்டது'' என்று சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Sep 3, 2024 - 11:40
Sep 4, 2024 - 10:10
 0
ஒரு கிராமத்தையே அலற விடும் 2 ஓநாய்கள்.. 8 பேரை கடித்துக் கொன்றன.. பீதியில் உறைந்த மக்கள்!
Uttar Pradesh Wolves

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேபாள எல்லையையொட்டி அமைந்துள்ளது பஹ்ரைச் மாவட்டம். மாவட்டத்தின் தலைநகராக பஹ்ரைச் கிராமம் விளங்கி வருகிறது. இங்கு வசிக்கும் மக்கள் கடந்த சில நாட்களாக தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

அதற்கு காரணம் 2 ஓநாய்கள். பஹ்ரைச் நகரை சுற்றி வனப்பகுதிகள் அதிகம் என்பதால் அங்கு இருந்து வெளியேறும் ஓநாய்கள் கிராம மக்களை கடித்து குதறி வருகின்றன. அதாவது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஓநாய்கள் வீடுகளுக்குள் புகுந்து மக்களை கடித்து கொன்று வருகின்றன. கடந்த மாதம் 17ம் தேதியில் இருந்து தொடர் அட்டுழியத்தில் ஈடுபட்டு வரும் ஓநாய்கள் இதுவரை 8 பேரை கடித்துக் கொன்றுள்ளன. ஓநாய்களின் கொலை வெறித் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி சர்வசாதாரணமாக கிராமத்துக்குள் நுழையும் ஓநாய்கள் 5 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி கடித்துக் குதறி வருகின்றன. நேற்று கூட பஹ்ரைச் கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த ஒரு ஓநாய் தனது பாட்டி பக்கத்தில் படுத்திருந்த 5 வயது சிறுமியை கடித்துக் குதறி வனப்பகுதிகளுக்குள் தப்பிச் சென்றது.

இதில் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வீட்டில் கதவு இல்லாததால் ஓநாய் புகுந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இப்படி ஓநாய்கள் தொடர்ந்து வேட்டையாடி வருவதால் பஹ்ரைச் கிராம மக்கள் துக்கமின்றி, நிம்மதியின்றி உள்ளனர். எந்த நேரத்தில், எப்போது ஓநாய்கள் வந்து தாக்குமோ என உயிரை கையில் பிடித்துக் கொண்டு அச்சத்தில் உறைந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநில போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து  'ஆபரேஷன் பேடியா' என்ற பெயரில் குழு அமைத்து மக்களை அச்சுறுத்தி வரும் ஓநாய்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அந்த 2 ஓநாய்களும் அவர்களின் கையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறது. ஓநாய்கள் பெரும்பாலும் இரவு நேரமே கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதாலும், பின்பு அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் சென்று விடுவதாலும் அவைகளை பிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக அடர்ந்த வனப்பகுதிகளில் காண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஆங்காங்கே கூண்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓநாய்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி உத்தரப்பிரதேச அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளன. ''கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மக்களை துன்புறுத்தி வரும் ஓநாய்களை பிடிக்காமல் வனத்துறையினர், காவல் துறையினர் என்ன செய்து வருகின்றனர்? வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தவறி விட்டது'' என்று சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow