குரங்கம்மை நோய் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

குரங்கம்மை நோய் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Sep 3, 2024 - 11:58
 0

குரங்கம்மை நோய் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில்,  குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல் தலைவலி குடல் வலி ஏற்பட்டால் 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும், பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்கு சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நோய் வைரஸ் தொற்று என்பதால் வைரஸ் தொற்று சிகிச்சையை இந்த நோய்க்கு தொடங்கவும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow