மந்தி பிரியாணியால் வந்த மயக்கம்...17 பேர் மருத்துவமனையில் அனுமதி

மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படும் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

Mar 24, 2025 - 17:22
Mar 24, 2025 - 17:40
 0
மந்தி பிரியாணியால் வந்த மயக்கம்...17 பேர் மருத்துவமனையில் அனுமதி
மந்தி பிரியாணி சாப்பிட்டவர்கள் மற்றும் ஹோட்டல்

மணவாளக்குறிச்சி அருகே மந்தி பிரியாணி சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மந்தி பிரியாணியால் மயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு நேற்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து 3 குழந்தைகள் உள்பட 17 பேர் குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 

Read more: நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வந்த சிக்கல்.. சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து அழுத சிஷ்யர்கள்

ஒரே நேரத்தில் வாந்தி, மயக்கத்தால் அவதிப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் உணவு பாதுகாப்பு துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஹோட்டலில் மந்தி பிரியாணி ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது. இதனால் அவர்களது வாந்தி, மயக்கத்திற்கு பிரியாணி தான் காரணமா என சந்தேகம் எழுந்துள்ளது. 

உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

இது தொடர்பாக உணவு பாதுகாப்புதுறையினர் டாக்டர்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.அவர்கள் தரும் விளக்கத்தின் அடிப்படையில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை அடுத்த எடுக்கப்படும் தெரிகிறது.இருப்பினும், மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படும் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow