சூப்பர் வுமன்... ஃபுட் போட்டோகிராபியில் கலக்கும் சர்மிளா!
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும்கூட அதிகளவில் போட்டோகிராஃபியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல வகையான போட்டோகிராஃபி இருக்கும்போது தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது ஃபுட் போட்டோகிராஃபி.
ஃபுட் போட்டோகிராபியில் அசத்தி வரும் சர்மிளா என்பவர் குறித்து கீழே பார்க்கலாம்.
"பி.டெக் படித்துவிட்டு, வீட்டில் இருந்தபடியே மைக்ரோவேவ் அவன் மூலம் பிஸ்கெட்டுகள், கேக்குகள், குக்கீஸ் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளையும் பெனகோட்டா. ஐஸ்கிரீம் உள்ளிட்ட 'ஜில்' டெஸர்ட்ஸ் வகைகளையும் தயாரித்து வந்தேன் விதவிதமான ரெசிப்பிக்களை செய்து பார்ப்பதில் எனக்கு இயல்பாகவே ஆர்வம் இருந்தது. அதற்குப் பிறகு ரெசிப்பி பினாக் தொடங்கி, பேக்கிங் ரெசிப்பிக்கள் மற்றும் டெஸர்ட் ரெசிப்பிக்களை ஆங்கிலத்தில் எழுதி புகைப்படங்களுடன் வெளியிட்டு வந்தேன். அந்த ரெசிப்பிக்களை என் செல்போனிலேயே படம் பிடித்துப் போட்டேன். நாளடைவில் உணவுப் பொருட்சுளைப் புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அதற்காகவே பிரத்யேகமாக கேமரா ஒன்றை வாங்கினேன். ஃபுட் ஸ்டைலிங்கில் கூடுதல் சுவனம் செலுத்த ஆரம்பித்தேன். நான் எடுத்த உணவுப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்தவர்கள் பாராட்டுத் தெரிவிக்கவே, தொடர்ந்து இதுபோன்ற புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். அடுத்தகட்டமாக, 'பிட்டி கிளிக்ஸ்' என்ற பெயரில் சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்து வர்த்தக ரீதியாக மற்றவர்களுக்கும் எடுத்துத் தர ஆரம்பித்தேன். ஃபுட் போட்டோகிராபி என்பது மிகப் பெரிய துறை. துறை. ஒரு உணவை சமைப்பதற்கு எவ்வளவு மெனக்கெடுகிறோமோ அந்த அளவுக்கு அதை மற்றவர்கள் விரும்பும்படி பிரசன்ட் செய்வதும் அவசியம்" என்கிறார் சர்மிளா.
தொடர்ந்து பேசிய அவர், “உணவுப் பதார்த்தங்களை அதன் நிறம், வடிவம், பொலிவு, இயற்கைச் சூழல் குன்றாமல் எடுப்பதற்கு நிறைய கற்பனைத் திறன் வேண்டும். முதன்முதலாக. ஃபுட் பிளேவர்ஸ் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துக்காக புகைப்படம் எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தேன். ஃபுட் எசன்ஸ், மாவு வகைகள், கலிபோர்னியா வால்நெட், சுரம் மசாலா பொருட்கள், செராமிக் பாத்திரங்கள் போன்றவற்றை தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்களுக்காக புகைப்படங்கள் எடுத்துத் தந்திருக்கிறேன்" என்கிற சர்மிளா, ஃபுட் வீடியோகிராபராகவும் பணியாற்றி வருகிறார்.
“ஒரு பொருளை புகைப்படம் எடுப்பது முக்கியமல்ல. அதை வைத்து என்ன சுதை சொல்கிறோம் (Story telling visuals) என்பதுதான் முக்கியம். உதாரணமாக, சிக்கன் மசாலா தயாரிக்கும் நிறுவனத்துக்காக வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும்போது, ஒரு பாத்திரத்தில் சிக்கன் கறியையும், அதற்கு அருகே ஒரு தட்டில் சப்பாத்தி அல்லது பராத்தாவை வைக்க வேண்டும். சிக்கன் மசாலாவின் மீது கொத்துமல்லித்தழைகளைத் தூவி இருக்கவேண்டும். இப்படி இயல்பாக எடுக்கும் புகைப்படங்களைப் பார்த்தே அந்த சிக்கன் மசாலாவின் சுவையைச் சொல்லி விட முடியும். தீம் பேஸ்ட் புகைப்படங்கள் எடுக்கும்போது, அது எந்த தருணத்திற்காக எடுக்கப்படும் புகைப்படம் என்பதை விஷுவலாகக் காட்ட வேண்டும். உதாரணமாக, கிறிஸ்துமஸ் தீமில் புகைப்படங்கள் எடுக்கும்போது, ஹாட் சாக்லேட், கேக் பின்னணியில் கிறிஸ்துமஸ் மரங்கள், பொக்கே வைப்பது முக்கியம். ஸ்நோ பால் மாதிரியான எபெக்ட்டை புகைப்படத்தில் காட்ட, ஒரு சல்லடையில் ஐஸிங் சுகர் போட்டு டஸ்டிங் செய்வோம். இதைப்போலவே மற்ற பண்டிகைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்ப கற்பனையை புகுத்தி எடுக்க வேண்டும்.
என்னுடைய பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பல்வேறு மாவட்டங்களில், மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்களின் தயாரிப்பை எனக்கு கூரியர் மூலம் அனுப்பி வைத்து விடுவார்கள். அந்தப் பொருட்களை யார் அதிகம் பயன்படுத்துவார்கள். எதற்காகப் பயன்படுத்துவார்கள் போன்ற விவரங்களையெல்லாம் முன் கூட்டியே கேட்டறிந்து கொள்வேன். அவர்களின் விருப்பத்திற்கேற்ப, புகைப்படங்களாகவோ அல்லது வீடியோவாகவோ இங்கிருந்தே எடுத்து அனுப்பிவிடுவேன். சாதாரணமான காட்சியையும், கதை பேசும் படக்காட்சியாக மாற்றிக் காட்டுவதே ஒரு நல்ல புகைப்படக் கலைஞருக்கு அடையாளம். குறுகிய காலத்தில் என்னுடைய 'பிட்டி கிளிக்ஸ்' பிராண்டு, மக்கள் மனதிலும் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியிலும் தற்பெயரைப் பெற்றிருக்கிறது. இதை இன்னும் பெரிய அளவுக்கு எடுத்துச் செல்லும் எண்ணம் இருக்கிறது" என்கிற சர்மிளா கடந்த ஏழு ஆண்டுகளாக இத்துறையில் வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளார்.
What's Your Reaction?