டங்ஸ்டன் விவகாரத்தில் மாநில அரசு எங்கேயும் எதிர்க்கவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு
டங்ஸ்டன் விவகாரத்தில் மாநில அரசு எங்கேயும் எதிர்க்கவில்லை, டெண்டர் விடும் போதும் எதிர்க்கவில்லை. ஆனால், பத்து மாதம் கழித்து தற்போது எதிர்க்கிறார்கள் என்று தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு ஜூலை 24 ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதுதொடர்பாக, மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுரங்கம், கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி ஏலம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்டிற்கு மத்திய அரசு வழங்கியுள்ளதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசு இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இறங்கி இருக்கிறார்கள். மத்திய அரசுக்கு இதிலிருந்து ஒரு ரூபாய் வருமானம் கிடையாது. அடுத்து இதுபோன்ற ஒரு பிரச்சனையை உருவாக்காமல், மத்திய அரசு ஏதாவது திட்டத்தை கொண்டு வருவதாகச் சொன்னால் முதலிலேயே சொல்ல வேண்டும்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அமித்ஷா வரக்கூடிய தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விரைவில் தமிழகம் வருகிறார், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கருப்புக்கொடி காட்டுபவர்கள் காட்டட்டும். நாங்கள் காவல்துறை கிடையாது. யாரெல்லாம் என்ன அட்டூழியம் செய்ய வேண்டுமோ ரோட்டிற்கு வந்து செய்யுங்கள். சட்டம் ஒழுங்கு தமிழக அரசிடம் உள்ளது.
அமித்ஷா எதுவும் தவறாக பேசவில்லை. வேண்டுமென்றே இவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவரது பேச்சுக்கு பிறகு அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஆட்சி, எந்த அளவிற்கு கொடூரத்தை இணைத்துள்ளது என்ற புதிய புதிய தகவல்கள் வெளிவருகிறது.
அமித்ஷாவின் கைகளால் கட்சி அலுவலகத்தை திறக்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். தயவுசெய்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்வதாகச் சொன்னால்தான் அமித்ஷா வருவார் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், பாமகாவிற்கு ஒரு கொள்கை உள்ளது. அதை அடைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. நேற்று அன்புமணி ராமதாஸ் பேசும்போது இதுதான் தங்களின் அன்னியர் இட ஒதுக்கீடு தான் தங்களின் அதிகபட்ச அரசியல் பயணம் என்று கூறியுள்ளார்.
திமுகவைப் பொறுத்தவரை பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகிறார்கள். எல்லா சமுதாயத்திற்கும் நியாயம் வேண்டும் என்பதை பாஜக விரும்புகிறது.
திமுக இன்னும் ஒரு வருடம் ஆட்சியில் இருக்கப்போகிறது. இன்றைக்கு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் நாங்கள் அரசியலே செய்யவில்லை, தேர்தலில் நிற்கவில்லை. இதைவிடத் தெளிவாக எப்படிச் சொல்ல முடியும். அது அவர்களுடைய கொள்கை. நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக சொல்கிறார்கள்.
அவர்களின் கொள்கை அவர்கள் பிரகடனப் படுத்துகிறார்கள். பாமக சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. அவர்கள் அரசியல் பயணத்தில் இது ஒரு உச்சபட்ச விஷயமாக அதைப் பார்க்கிறார்கள். விகிதாச்சார அடிப்படையில் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.
பீகாரில் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை பாரதி ஜனதா கட்சி தடை செய்யவில்லை. நீதிமன்றம் தடை செய்துள்ளது. மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று சொல்லவில்லை.
கர்நாடகாவில் கணக்கெடுப்பு நடத்தி விட்டார்கள். ஆனால் அந்த அறிக்கை திருடப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். 69 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது வேகமாக ஜாதிபாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசிற்குச் சொல்லியுள்ளது. மாநில அரசுக்கு தான் சொல்லியுள்ளது மத்திய அரசிற்கு அல்ல.
ஜாதிவாரி கணக்கெடுப்பை பாஜகவும் ஆதரிக்கிறது. விகிதாச்சார அடிப்படையில் எல்லா சமுதாயத்தையும் முன்னெடுத்துச் செல்லலாம். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த யார் தடை செய்து என்று முதலமைச்சர் கூற வேண்டும். மத்திய அரசு தடை செய்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
நேற்று இந்தியாவில் 4 மாநிலங்களில், புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பு துறையில் பணியாற்றியவர்களுக்கு ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்திற்கும் 35 ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் பணியாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அவரின் பார்வை வித்தியாசமாக இருக்கும். அவர் அரசியலில் இருந்து ஆளுநராக வரவில்லை. நிச்சயமாக அவருக்கு ஒரு பார்வை இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சீனாவின் அச்சுறுத்தல் உள்ளது. இலங்கையில் சீனா பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தம் வரவேற்புரை பார்க்கிறோம். சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளது. சட்ட ஒழுங்கு பார்வையில் பார்ப்பதற்கு அவருக்கு முழு தகுதி உள்ளது என்பது தான் எனது கருத்தாக உள்ளது.
இந்த வழக்கில், நிறைய மர்ம முடிச்சுகள் உள்ளது. நீதிபதிகளில் ஒருவர் நான் விசாரிக்க மாட்டேன் என்று வெளியேறி இருக்கிறார். அந்த வழக்கில் இருந்து அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அதை விசாரித்த ஓர் அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இதுகுறித்து டிஜிபி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி என்ன நடக்கிறது என்று விளக்க வேண்டும் என்று கூறினார்.
What's Your Reaction?