அதிகனமழை எச்சரிக்கை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில்  நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Nov 29, 2024 - 09:51
 0
அதிகனமழை எச்சரிக்கை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிகனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு  நாளை (நவம்பர் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகப்பட்டினத்திற்கு  தென்கிழக்கு தொலைவில் 310 கிலோமீட்டர் தொலைவில், சென்னையில் தெற்கு 480 கிலோமீட்டர்  தொலைவில் இடம் பெற்றுள்ளது. 30 ஆம் தேதி புயல்  கரையை கடக்கிறது. அந்த நேரத்தில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது.

29 தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 30 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்  மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை ஆய்வு மையத்தின் அதிகன மழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கும், மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow