தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய மாணவர்.. விசாரணையில் பகீர் தகவல்
கல்லூரி மாணவிகளுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டிய மாணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கல்லூரி மாணவிகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
நாகர்கோவில் மாவட்டம் வாத்தியார் வில்லை பகுதியை சேர்ந்த ஸ்ரீகண்டன் என்பவரின் மகன் ஸ்ரீ தர்ஷன் (22). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். இவருக்கு அதே கல்லூரியில் படித்து வரும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.
அந்த நேரத்தில் ஶ்ரீதர்ஷன் இளம்பெண்ணுடன் அடிக்கடி வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்து உள்ளார். அந்த நேரத்தில் அந்த இளம் பெண்ணுக்கு தெரியாமல் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ரீதர்ஷன் எடுத்து வைத்து இருந்தார். ஸ்ரீதர்சனின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த இளம் பெண் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் அந்த 21 வயது இளம்பெண் இடையர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தனது தோழிகளை பார்ப்பதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த ஸ்ரீ தர்ஷன் அந்த இளம்பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்து உள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த ஸ்ரீதர்ஷன் அந்த இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டி உள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த இளம் பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் தேனியைச் சேர்ந்த இளம் பெண்ணிடமும் ஸ்ரீதர்ஷன் காதலிப்பதாக கூறி பழகி உள்ளார். மேலும் அந்த நேரத்தில் தனிமையில் இருந்த போது ஆபாச புகைப்படங்களை ஸ்ரீதர்ஷன் எடுத்து வைத்து உள்ளார். அந்த இளம் பெண்ணிடமும் ஸ்ரீ தர்ஷன் போட்டோக்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி தகராறு செய்து உள்ளார்.
தொடர்ந்து இரண்டு இளம்பெண்களும் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் கல்லூரி மாணவர் ஸ்ரீதர்ஷன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் இதேபோல கல்லூரி மாணவிகள் பலரிடம் புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி மிரட்டி உள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, காணொளி எடுத்து பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?