இந்தியா-இலங்கை கிரிக்கெட் தொடர்: போட்டிகள் தொடங்கும் நேரம்? எதில் பார்க்கலாம்?

இலங்கை தொடருக்கான இந்திய அணியை சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்தது. டி20 அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் 50 ஓவர் ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Jul 22, 2024 - 21:54
 0
இந்தியா-இலங்கை கிரிக்கெட் தொடர்: போட்டிகள் தொடங்கும் நேரம்? எதில் பார்க்கலாம்?
INDIA TOUR OF SRILANKA

கொழும்பு: இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது. வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது.

டி20 தொடர் முழுவதும் இலங்கையின் பல்லேகலேவிலும், 50 ஓவர் போட்டி தொடர் முழுவதும் இலங்கையின் கொழும்புவிலும் நடைபெற உள்ளன. முதல் டி20 போட்டி வரும் 27ம் தேதி தொடங்குகிறது. 2வது டி20 போட்டி வரும் 28ம் தேதியும், 3வது மற்றும் கடைசி  டி20 போட்டி வரும் 30ம் தேதியும் நடைபெறுகின்றன.

இதேபோல் முதலாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெறுகிறது. 2வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 4ம் தேதியும், 3வது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 7ம் தேதியும் நடைபெற உள்ளன. டி20 போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. 50 ஓவர் போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த தொடர் முழுவதையும் நேரலையில் ஒளிபரப்பும் உரிமத்தை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Sony Sports Network ) நிறுவனம் பெற்றுள்ளது. அதன்படி சோனி டென் 5 ( Sony Ten 5),  சோனி டென் 3 ( Sony TEN 3) ஆகிய சேனல்களில் இந்த போட்டிகளை பார்க்கலாம். மேலும் சோனி லைவ் (Sony LIV) ஓடிடி தளத்திலும் இந்த போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.

இலங்கை தொடருக்கான இந்திய அணியை சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்தது. டி20 அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல்  50 ஓவர் ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும்,  துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட்,சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் முகமது சிராஜ்.

இந்திய 50 ஓவர் அணி: ரோகித் சர்மா (கேப்டன்),  சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன். சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது மற்றும் ஹர்ஷித் ராணா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow