இந்தியன் தாத்தாவும், வேட்டையனும் சந்தித்துக்கொண்டபோது... இயக்குனர் ஷங்கர் எக்ஸ்குளூசிவ்

நம்மை நம்பியவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். ரசிகர்கள் கொடுக்கும் வெற்றிக்கு மரியாதைஉழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

Jul 9, 2024 - 21:42
Jul 10, 2024 - 10:23
 0
இந்தியன் தாத்தாவும், வேட்டையனும் சந்தித்துக்கொண்டபோது... இயக்குனர் ஷங்கர்  எக்ஸ்குளூசிவ்
Actor Kamal Haasan with Rajinikanth


இந்தியன் 2 ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால், சென்னை பாலவாக்கத்தில் உள்ள இயக்குனர் ஷங்கர் அலுவலகம் பரபரப்பாக இருக்கிறது. கொச்சியில் நாளை நடக்க உள்ள இந்தியன் 2 புரமோசன் டூருக்கு தயாராகி வருகிறார் ஷங்கர். அவ்வப்போது போஸ்ட் புரடக் ஷன் பணிகள், பல உத்தரவுகள். இதற்கிடையே, புன்னகையுடன் பேட்டிக்கு வந்து அமர்கிறார் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர். 31 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சினிமாவில் இருக்கும் வெற்றியாளர். இந்தியன் 2, இந்தியன் 3, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, வேள்பாரி, கேம் சேஞ்சர், விவேக், முந்தைய படங்கள், மகன் என பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசினார்.


‘‘ஒவ்வொரு படத்துக்கும் முதலில் கதை எழுதிவிட்டு நடிகர்களை தேடுவீர்களா? ஹீரோவை கமிட் செய்துவிட்டு கதை எழுதுவீர்களா?’’ என்று ஆரம்பித்தால், ‘‘பொதுவாக, கதை எழுதிவிட்டு நடிகர்களை தேடுவது என் பாணி. ஆனால், இந்தியன் படம் முன்பே வந்து இருந்ததால், இந்த முறை அப்படி சொல்ல முடியாது. இந்தியன் 2 கரு கிடைக்க பல ஆண்டுகள் காத்திருந்தோம். சரியாக செட்டானதும் தொடங்கிவிட்டோம். இந்தியன் வந்த காலத்தில் அமெரிக்காவில் மேக்கப் விஷயங்கள் ரொம்ப கஷ்டம், காஸ்ட்லி. அந்த தாத்தா கெட்டப் ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி உருவாக்கினார். அப்போது சிலர் இந்தியன் தாத்தாவை பார்த்தால் வேறு மாதிரி தாத்தாவாக இருக்கிறாரே, கமல் தெரியலை என்று கமெண்ட் அடித்தனர். அந்த மேக்கப் திக்னஸ் ஜாஸ்தி. இப்போது டீ ஏஜிங் போன்ற நவீன முறைகள் வந்துவிட்டன. அதனால், கமல்சார் முகம் மேக்கப்பால் மறையக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அதற்கு தக்கப்படி மேக்கப் போட்டோம், மேக்கப் தின் ஆனது. இதை விட இன்னும் சில அதி நவீன டெக்னாலாஜி இருந்தாலும், இந்த பட்ஜெட், இந்த கதைக்கு இது போதும் என நினைத்தோம்.

 இந்தியன் காலத்தில் அவர் வயது வேறு. இப்போது வேறு. ஆனாலும், பல மணி நேரம் மேக்கப் போட்டு, கஷ்டமான டிரஸ் போட்டு, பல மொழிகள் பேச வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். முன்பே சொன்ன மாதிரி சில காட்சிகளில் அவர் ரோப்பில் தொங்கியபடி பல நாட்கள் நடித்தார். இதெல்லாம் அவரால் மட்டுமே முடியும். முதற்பாகத்தில் தாத்தா கெட்டப்பில் 40 நாட்கள் நடித்தால், இப்போது 70நாட்கள் நடித்தார். ’ என்றார்.ஒரு சிலர் இந்தியன் 2வில் வருவது சேனாதிபதி கிடையாது. அவர் மகன் என்றார்கள். இப்படி பல பேன் தியரி. அதை ரசிக்கிறேன் என்று சிரிக்கிறார்.
 
‘‘மற்ற படங்களை விட இந்தியன் 2 உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்தியதா’’ என்றால், ‘‘ஒரு கட்டத்தில் இந்த படம் வருமா?வராதா என்ற நிலை கூட வந்தது. ஆனால், பலரின் உழைப்பு, முயற்சி, குறிப்பாக சினிமா மீதான பேஷனால் இந்த அளவுக்கு வந்து ரிலீஸ் ஆகப்போகிறது. எனக்கு எந்த படத்திலும் வராத கஷ்டம் இதில் வந்தது என்பது உண்மை. எல்லாருக்கும் டப் ப்ரீயட் வரும். எனக்கும் இந்த முறை வந்தது. அதை தாண்டி வந்துவிட்டோம். எங்களின் உழைப்பு, டீமின் அர்ப்பணிப்பு ரசிகர்களை திருப்பதி படுத்தும். கேமரா, இசை, நடிகர்கள் என அனைத்து தரப்பு சிறப்பாக பணி செய்து இருக்கிறார்கள்’’ என்றார்


‘‘உங்க படத்துக்கு வெளிநாட்டில் கிராபிக்ஸ் பணிகளை கொடுப்பது ஏன்? இந்தியாவில் அதற்கான நிறுவனம், மனிதவளம் இல்லையா’’ என்றால், ‘‘அப்படி சொல்லமுடியாது. இ்ந்தியன் 2 படத்துக்கு நிறைய கிராபிக்ஸ் பணிகளை மும்பையில் உள்ள ரெட்சி்ல்லீஸ்தான் செய்தார்கள். தவிர, விஎப்எக்ஸ் சூப்பர்வைசர்தான் கம்பெனிகளை தேர்ந்தெடுப்பார்கள். இப்போது பாரினை விட, இந்தியாவி்ல் திறமை சாலிகள் அதிகமாகிவிட்டார்கள். 2.0 படம் அளவுக்கு, இந்தியன் 2வில் அதி்க கிராபிக்ஸ் இல்லை. கமல்சார் ரோப்பில் 4 நாட்கள் தொங்கிய அந்த சீன் எனக்கு சவலாக இருந்தது. அந்த நாலு நாளும் தாத்தா மேக்கப்பில், பஞ்சாப் மொழியில் பேசிக்கொண்டு, தொங்கிக்கொண்டு,கையில் வரைந்துகொண்டு வேகமாக நடிக்கும் சீனுக்கு அவ்வளவு கஷ்டப்பட்டோம், அவர் எங்களைவிட ரொம்பவே கஷ்டப்பட்டார். என்னை கவர ஒரு கருவை , ஒரு ரசிகர் மனநிலையில் உருவாக்குகிறேன். அதனால், பிரமாண்டம், கமர்ஷியல், வசூல் எல்லாமே செட்டாகிறது’’ என்றார்.

‘‘இப்பவெலலாம் விமர்சனங்கள் மாறிவிட்டதே. செல்போன் வைத்திருக்கிற அனைவருமே பேசுகிறார்களே’’ என்ற கேள்விக்கு ‘‘ ஆரோக்கியமோ இல்லையோ, நாம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் விமர்சனத்தில் உண்மை இருந்தால், அதை புரிந்துகொள்ள வேண்டும். உள் நோக்கத்துடன் விமர்சனம் என்றால், அந்த நபரின் நோக்கம் தெரிந்து நாம் அதை நிராகரித்துவிடலாம் என்பது என் கருத்து’’
 என்று நச் பதில் சொன்னார். நம்மை  நம்பியவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். ரசிகர்கள் கொடுக்கும் வெற்றிக்கு மரியாதைஉழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ரசிகர்கள் அன்பு, சப்போர்ட்டுக்காகதான் உழைக்கிறேன். இந்தியன் முதற்பாகமே 3 மணிநேரத்துக்கு அதிகமாக ஓடியது. முதற்பாகம் தமிழகத்தை சுற்றி இருந்தது. இந்தியன் 2 கதை, இந்தியா முழுக்கவிரிகிறது. அதை எடுத்து, எடிட் செய்தால் நீளம் அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் மேல் அதிகமாக வெட்டி எரிய முடியவில்லை. வெட்டினால் அதன் சோல் போய்விடும். கடைசியில் 2 பார்ட் இருப்பதை உணர்ந்தேன். 2 பாகத்துக்கான கிளைமாக்ஸ், விறுவிறுப்பு இருந்தது. அதனால், இந்தியன் 2, 3 என வருகிறது. அந்த கதையே இப்படி வடிவம் எடுத்துக்கொண்டது. இரண்டு பாகத்தலும் கமல்சார் படம் முழுக்க வருகிறார். இந்தியன் 4 எடுக்கிற ஐடியா இல்லை. அது வந்தால் பார்த்துகிடலாம் ’என்றார்

‘‘சரி, இந்தியன் 2 படப்பிடிப்புதளத்துக்கு ரஜினி வந்தாரே? இந்தியன் தாத்தா கெட்அப்பில் கமலும்,  வேட்டையன்  கெட்அப்பில் ரஜினியும் இணைந்து இருக்கும் அந்த போட்டோவும் வைரல் ஆனதே? அவர்கள் என்ன பேசினார்கள்’’என்று  விசாரித்தால், ‘‘அந்த சமயத்தில் நான் உள்ளே செட்டில் வேறு வேலையில் இருந்தேன். ரஜினிசார் வந்தது தெரியாது. ஆனால், என் டீமில் அவர்களுடன் போட்டோ எடுத்தனர்,, ஜாலியாக பதிவிட்டனர்
இருவரின் கெட்டப் காரணமாக அந்த போட்டோ வைரல் ஆனது. அது மகிழ்ச்சி’’என்று சிரிக்கிறார். 
‘‘என்னை  பொறுத்தவரையில் ரஜினி, கமல் இரண்டுபேருமே வொர்க் விஷயத்தில் சமம்தான். இரண்டுபேரிடம் சரியான ஸ்கிரிப்ட் சொல்ல வேண்டும். இரண்டுபேருமே கதையில், உழைப்பில் கன்வின்ஸ் ஆகிவிட்டால் நாம் என்ன சொன்னாலும் செய்வார்கள்’’ என்பது என் கருத்து என்று முடிக்கிறார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow