ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி - 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை அடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.

Jul 10, 2024 - 02:30
Jul 10, 2024 - 15:53
 0
ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி - 18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி அமல்ராஜ் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை அடுத்து 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை அடுத்து நேற்று திங்கட்கிழமை [08-07-24] சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை பெருநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல, சென்னை தலைமையிட ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் - தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐஜியாக இடமாற்றம்

அமல்ராஜ் - மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம்

அபின் தினேஷ் மொடக் - தாம்பரம் காவல் ஆணையராக நியமனம்

ஜெயராம் - தமிழக காவல்துறை குற்ற ஆவண காப்பகத்தின் ஏடிஜிபியாக நியமனம்

காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ் குமார் அகர்வால் - ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக நியமனம்

வெங்கட்ராமன் - தமிழக காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம்

வினீத் தேவ் வான்கடே - தமிழக காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக நியமனம்

சிபிசிஐடி ஐஜி அன்பு - சிபிசிஐடி ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு

சஞ்சய் குமார் - கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக நியமனம்

சந்தீப் மீட்டல் - தமிழக காவல்துறை சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக நியமனம்

ராஜீவ் குமார் - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஜிபியாக நியமனம்

தமிழ்ச்சந்திரன் - தமிழக காவல்துறை தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக நியமனம்

சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா - தமிழக காவல்துறை தெற்கு மண்டல ஐஜியாக இடமாற்றம்

கண்ணன் - சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம்

நரேந்திரன் நாயர் - சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம்

பிரவீன் குமார் அபிநபு - சேலம் நகர காவல் ஆணையராக நியமனம்

விஜயகுமாரி - ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமனம்

லட்சுமி - திருப்பூர் நகர காவல் ஆணையராக நியமனம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow