தமிழ்நாடு

“எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்!” மீண்டும் சைலண்ட் மோடில் நடிகை சீமான் நிம்மதி பெருமூச்சு!

சீமான் விவகாரத்தில், இதுக்குமேல் போராட விருப்பமில்லை என அவர் மீது பாலியல் புகாரளித்த நடிகை புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தையே சூடாக வைத்திருந்த இந்த பஞ்சாயத்து, தற்போது புஷ்வானமாக போய்விட்டதாக தெரிகிறது. ஏன் இந்த திடீர் மாற்றம்..?

“எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்!” மீண்டும் சைலண்ட் மோடில் நடிகை சீமான் நிம்மதி பெருமூச்சு!
“எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்!” மீண்டும் சைலண்ட் மோடில் நடிகை சீமான் நிம்மதி பெருமூச்சு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை ஒருவர் பல ஆண்டுகளாக பாலியல் குற்றசாட்டை முன்வைத்து வருகிறார். சீமான் மற்றும் நடிகை இடையேயான இந்த தனிப்பட்ட பஞ்சாயத்து, அரசியல் ரீதியாகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக சீமான் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனால், சீமான் வீட்டில் போலீஸார் சம்மன் ஒட்ட, அது கிழிக்கப்பட்டச் சம்பவம் பெரும் புயலை கிளப்பியது. 
இந்த களோபரங்களுக்குப் பின்னர் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான சீமான், போலீஸாருக்கு விளக்கம் கொடுத்தார். அதோடு, செய்தியாளர்களை சந்தித்து, நடிகை குறித்து மிக தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். அதாவது நடிகை தான் விருப்பப்பட்டு 6 மாதம் தன்னுடன் உறவில் இருந்ததாகவும், அவருக்கு பணம் கொடுத்து உதவி செய்தது ஆகியவை பற்றியும் சீமான் பேசியிருந்தார். இதனிடையே சீமான் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், நடிகை அளித்த பாலியல் புகார் மீது விசாரணை நடத்த தடைகோரியும்  உச்சநீதிமன்றம் சென்றார் சீமான். இதில், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு எட்டவும் உத்தரவு வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை, அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பில் செட்டில்மென்ட் குறித்து சொல்லப்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் பலர் சீமான் தனக்கு இரவோடு இரவாக 10 கோடி ரூபாய் கொடுத்துவிட்டார் என்றும், ஈழத்தமிழர் பணத்தை எடுத்து நடிகைக்கு கொடுத்துட்டார் எனவும் அபாண்டமாக பழி போடுவார்கள். அதனை தவிர்க்கவே இந்த வீடியோ எனக் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த வழக்கில், சென்னையில் பதியப்பட்ட FIR மீது காவல்துறை விசாரணை மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியிருந்தார். அதேநேரம் காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் எனக்காக வாதிட்டனர். ஆனால், உச்சநீதிமன்றத்தில் தனது சார்பாக யாரும் பேசவில்லை. சீமான் கோரிக்கையை மட்டுமே கேட்டு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி உத்தரவிட்டுள்தாகவும் நடிகை கூறியுள்ளார். 
உயர்நீதிமன்றத்தில் தனக்காக வாதிட்டவர்கள் ஏன் உச்சநீதிமன்றத்தில் போய் வாதாடவில்லை? இனி எனக்கு எந்த நீதியும் நியாயமும் கிடைக்காது என தெரிந்துகொண்டேன். அதனால் இனி நான் போராடப் போவதில்லை. இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இப்போது கூட நான் இந்த வீடியோ ஏன் பதிவிடுகின்றேன் என்றால், எனக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்பதை தெரியப்படுத்த தான் என நடிகை அந்த வீடியோவில் கூறியுள்ளார். 
நடிகை வெளியிட்ட இந்த வீடியோ, சீமான் உட்பட நாம் தமிழர் தம்பிகளை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சீமான் ஏமாற்றிவிட்டதாக, கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் நடிகை புகார் அளித்தார். இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. அதேநேரம், இந்த வழக்கில் இருந்து நடிகை சைடு வாங்கினாலும், தமிழ்நாடு அரசு சீமானை சும்மா விடுமா அல்லது நடிகை கொடுத்த பாலியல் வழக்கை மீண்டும் கையில் எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.