Annamalai : முதல்வர் போன வெளிநாட்டு டூர்.. ரூ.6000 கோடி என்ன ஆச்சு?.. வெள்ளை அறிக்கை கேட்கும் அண்ணாமலை

BJP Leader Annamalai Attacks CM Stalin America Tour : துபாயில் இருந்து ரூ.6000 கோடி நிதி வரும் என்றார்கள் ஆனால் வரவில்லை என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் சென்ற வெளிநாட்டு பயணம் தோல்வியடைந்து விட்டதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Aug 27, 2024 - 14:20
Aug 27, 2024 - 14:44
 0
Annamalai : முதல்வர் போன வெளிநாட்டு டூர்.. ரூ.6000 கோடி என்ன ஆச்சு?.. வெள்ளை அறிக்கை கேட்கும் அண்ணாமலை
annamalai vs mk stalin

BJP Leader Annamalai Attacks CM Stalin America Tour : முதுபெரும் மருத்துவரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் ஹெச்.வி.ஹண்டே  எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா இன்று ( 27-08-2024) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குச் சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் (சத்யா ஸ்டுடியோ) நடைபெற்றது. 

Our Constitution என்ற ஆங்கில நூலையும், சட்ட மேதை அம்பேத்கர் என்ற தமிழ் நூலையும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.  கல்வியாளர்கள், நீதி அரசர்கள், பத்திரிக்கையாளர்கள் பலரும் பங்கேற்றன. நூல் வெளியீட்டு விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 
திமுக, அதிமுக என இரண்டு கட்சி தலைவர்களையும் கடுமையாக சாடினார். முதல்வர் ஸ்டாலின் இதுவரை சென்ற வெளிநாட்டு பயணங்கள் தோல்வியடைந்தாகவும் கூறினார். 

எவ்வித அரசியல் குடும்ப பின்னணியும் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள் வரவேண்டும் என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்தார். செப்டம்பர் 1
ஆம் தேதி முதல் பாஜக உறுப்பினர் சேர்க்கையை துரித படுத்த உள்ளது.செப்டம்பர் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி பாஜகவில் மோடி தன் இணைப்பை புதுப்பிக்க உள்ளார்.

இந்த முறை கிராமங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக மேற்கொள்ள தமிழக பாஜக முடிவு செய்துள்ளது.லண்டனில் இருந்தாலும் இதயம் தமிழகத்தில் இருக்கும். தொடர்ந்து என்னுடைய சண்டை ஆளும் கட்சிக்கு எதிராக இருக்கும்.துபாயில் இருந்து 6000 கோடி முதலீடு வரும் என்றார்கள் ஆனால் முதலீடு வரவில்லை.

ஸ்பெயின் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்தும் முதலீடுகள் வரவில்லை தற்போது அமெரிக்கா செல்கிறார் தமிழக முதலமைச்சர் இதுவரை முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கை வெளியாகவில்லை முதல் மூன்று பயணங்களும் தோல்வி பயணங்கள் தான்

திமுகவில் இளைஞரணி தலைவர்கள் 50 வயதிற்கு மேல் இருந்தார்கள். இன்றைக்கு 53 வயதில் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி தலைவராக இருக்கிறார். பாஜகவில் மட்டுமே இளைஞருக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு  கொடுத்துள்ளது.

துபாயில் இருந்து ரூ.6000 கோடி நிதி வரும் என்றார்கள் ஆனால் வரவில்லை என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் சென்ற வெளிநாட்டு பயணம் தோல்வியடைந்து விட்டதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow