Vinesh Phogat Returns To India : கதறி அழுத வினேஷ் போகத்.... கட்டித்தழுவி ஆறுதல் கூறிய நண்பர்கள், உறவினர்கள்!
Vinesh Phogat Returns To India : பாரிஸிலிருந்து டெல்லிக்கு திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Vinesh Phogat Returns To India : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளன. கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 11ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 5 வெண்கலகம், 1 வெள்ளி என மொத்தம் 6 பதங்கங்களை கைப்பற்றி 71வது இடத்தை பிடித்தது. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தை தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார். இதேபோல் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை வென்று இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. இதேபோல் 55 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்தப் போட்டியில், 21 வயதான இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தினார். இதேபோல் இந்தியாவுக்கு இன்னொரு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைத்திருக்க வேண்டியது.
நாடு திரும்பிய வினேஷ் போகத்திற்கு உற்சாக வரவேற்பு!#VineshPhogat #Olympics #ParisOlympics2024 #OlympicGamesParis2024 #KumudamNews24x7 pic.twitter.com/aD00QPc8Zs — KumudamNews (@kumudamNews24x7) August 17, 2024
50 கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்க இருந்த நிலையில், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திடீரென தகுதி நீக்கம் செய்தது. இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு கலைந்து போனது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வினேஷ் போகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வருமா? என ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தது. இந்நிலையில், வினேஷ் போகத்தின் மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் மனமுடைந்த வினேஷ் போகத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் நாட்டு மக்கள் அனைவருமே தங்களது ஆறுதல்களை தெரிவித்தனர்.
மேலும் படிக்க: பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்... துணிச்சலாக காப்பாற்றிய கார் டிரைவர்
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பாரிசிலிருந்து டெல்லிக்கு திரும்பிய வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் அவரை சூழ்ந்துகொண்ட நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி கதறி அழுத வினேஷ் போகத்துக்கு கட்டித்தழுவி ஆறுதல் கூறினர். இந்த காணொளியை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நெட்டிசன்கள், “வினேஷ் போகத் பதக்கத்தை வெல்லாமல் இருந்திருக்கலாம்... ஆனால் நாட்டு மக்களின் இதயங்களை வென்றிருக்கிறார்” என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
''காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு.....'' கண்ணீர் சிந்திக்கொண்டு பேரணியில் காணப்பட்ட வினேஷ் போகத்..#Delhi | #VineshPhogat | #OlympicGamesParis2024 | #Public | #GoldMedal | #BJP | #KumudamNews pic.twitter.com/546uka75HT — KumudamNews (@kumudamNews24x7) August 17, 2024
What's Your Reaction?






