TVK Vijay Party Flag Released Date : விஜய்யின் கோட் திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை கோட் படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறது படக்குழு. இதற்காக அடுத்தடுத்து போஸ்டர், வீடியோ கிளிம்ப்ஸ் ஆகியவைகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. கோட் படத்தின் ட்ரெய்லர் பரபரப்பு ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்த ரெடியாகிவிட்டார் தளபதி விஜய்.
கோலிவுட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரிசையில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் விஜய். ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்க முடிவு செய்துவிட்டார் தளபதி விஜய். இதுகுறித்து சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்ட விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு தனது கட்சியின் பெயர் தவெக, அதாவது தமிழக வெற்றிக் கழகம் என்பதையும் முறைப்படி அறிவித்திருந்தார்.
விஜய்யின் அரசியல் வருகைக்கு பலர் வரவேற்புத் தெரிவித்திருந்தாலும், அவர் மீது விமர்சனங்கள் எழாமலும் இல்லை. ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்து திட்டமிட்டு வருகிறார். அதன்படி, கோட் படத்தின் ரிலீஸுக்குப் பின்னர் தவெக முதல் அரசியல் மாநாட்டை நடத்த விஜய் பிளான் செய்துள்ளார். இந்த மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் திருச்சியில் நடைபெறும் என சொல்லப்பட்ட தவெக மாநாடு, தற்போது விக்கிரவாண்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.
மேலும் படிக்க - கோட் ட்ரைலர்... விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்குமா..?
விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா கல்லூரி அருகே, செப்டம்பர் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாநாட்டுக்கு முன்பே கட்சியின் கொடியை அறிமுகப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, வரும் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் கட்சி கொடியை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளாராம் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கட்சியின் அடிப்படை கொள்கைக்கு ஏற்ப மக்கள் ஒன்றுபடுத்தும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், கட்சி கொடியில் எந்தெந்த வண்ணங்கள் இடம்பெறும் என்பது குறித்தும் இறுதி முடிவு எடுப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் குறித்தும் செய்திகள் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.
தவெக கட்சி கொடியை வரும் 22ம் தேதி அறிமுகம் செய்கிறார் விஜய்#kumudamnews | #kumudamnews24x7 | #kumudam | #TVK | #TVKparty | #TVKvijay | #partyflag | #Vijay | @actorvijay | @tvkvijayhq | #Tamilagavetrikazhagam pic.twitter.com/tdQ1QzMKnS
— KumudamNews (@kumudamNews24x7) August 17, 2024