GOAT Trailer Release Today : இன்று மாலை வெளியாகும் கோட் ட்ரைலர்... விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்குமா..?
GOAT Trailer Release Today : வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையுமா என்பதே இப்போதைய பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
GOAT Trailer Release Today : தளபதி விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய்யின் கேரியரில் இதுவரை இப்படியொரு படம் வந்ததே கிடையாது என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கோட் உருவாகியுள்ளதாம். முக்கியமாக விஜய் மல்டி ஸ்டார்ஸ் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார். ஆனால், கடைசியான ரிலீஸான லியோவைத் தொடர்ந்து, கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் என பெரிய கேங் உடன் களமிறங்குகிறார் விஜய்.
அதேபோல், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் என இந்த நட்சத்திரக் கூட்டணியின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் இந்தப் படம் ஃபேமிலி சென்டிமென்ட், ஆக்ஷன், சயின்ஸ் பிக்ஷன் என பக்கா கமர்சியல் ஜானரில் உருவாகியுள்ளதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் விஜய்யை டி-ஏஜிங் செய்து ரொம்ப இளமையான கெட்டப்பில் நடிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு. கோட் படத்தில் ரொம்பவே ஸ்பெஷலான அம்சமாக விஜய்யின் டி-ஏஜிங் கெட்டப் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஆக.17) மாலை 5 மணிக்கு கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்தப் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்களும், விஜய்யின் கிளிம்ப்ஸ் வீடியோவும் ஏற்கனவே வெளியாகிவிட்டன. விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் சாங் என மூன்று பாடல்களும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கொடுத்தன. ஆனால், விஜய்யின் கிளிம்ப்ஸ் வீடியோ மட்டுமே ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இதனால், இன்று வெளியாகும் ட்ரெய்லர் ரசிகர்களின் அதிருப்திகளுக்கு பதில் சொல்லும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் எத்தனை கேரக்டர்களில் நடித்துள்ளார்,,?, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம் ஆகியோரின் ரோல்கள் என்ன..?, படம் எந்த மாதிரியான ஜானர்..? என ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் இன்று வெளியாகும் ட்ரைலர் தான் பதிலாக அமையவுள்ளது. இதனால் ட்ரைலரின் ஒவ்வொரு நொடியையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளாராம் இயக்குநர் வெங்கட் பிரபு. இந்நிலையில், கோட் ட்ரைலர் வெளியீடு நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்கவுள்ளதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க - தங்கலான் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
அதேநேரம் இந்நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்வாரா இல்லையா..? என்பது தான் மில்லியன் டாலர் கேள்விகளாக உள்ளது. கோட் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று ட்ரைலர் வெளியாகும் போதே படத்தின் ப்ரோமோஷனை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதேபோல், கோட் இசை வெளியீட்டு விழா குறித்தும் இதுவரை சரியான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?