இலங்கை அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணி... பயிற்சியாளர் கவுதம் கம்பீரை விமர்சிக்கும் ரசிகர்கள்!
BCCI Annouced Indian Team For Sri Lanka Tour : இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றப் பின்னர், இந்திய அணி விளையாடவுள்ள முதல் தொடர் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

BCCI Annouced Indian Team For Sri Lanka Tour : இலங்கை சுற்றுப்பயணம் செல்லவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி, இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. அதன்படி, முதல் டி20 போட்டி வரும் 27ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி 28ம் தேதியும் நடைபெறுகின்றன. மூன்றாவது டி20 ஆட்டம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. இந்த மூன்று ஆட்டங்களும் இலங்கையின் பல்லிகெலே மைதானத்தில் நடைபெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் நடைபெற உள்ளன. இந்தத் தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்கவுள்ளார். இதனால் அவரது விருப்பத்தின் படியே இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, இந்திய டி20 அணியில் சூர்யகுமார் யாதவ், சுப்மான் கில், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷிதீப் சிங், கலீல் அஹமத், முஹம்மது சிராஜ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாக சுப்மான் கில்லும் பொறுப்பேற்றுள்ளனர்.
அதேபோல், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், துணை கேப்டனாக சுப்மான் கில்லும் தேர்வாகியுள்ளனர். அவர்களுடன் விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷிதீப் சிங், ரியான் பராக், அக்ஷர் பட்டேல், கலீல் அஹமத், ஹர்ஷித் ரனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். டி20 உலகக் கோப்பைக்குப் பின்னர் கோலி, ரோஹித், ஜடேஜா ஆகியோர் இனி 20 ஓவர் போட்டிகளில் ஆடப் போவதில்லை என அறிவித்தனர். அதனால், அவர்கள் டி 20 அணியில் இடம்பெறவில்லை. ஆனால், டி20 ஸ்பெஷலிஸ்டான ருத்ராஜ் கெய்க்வாட் இந்திய டி20 அணியில் இல்லாதது ரசிகர்களிடம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், ஓபனராகவும் திறம்பட செயல்பட்டிருந்தார் ருத்ராஜ் கெய்க்வாட். அதேபோல், இந்திய அணிக்காக கடைசியாக விளையாடிய 7 டி20 போட்டிகளில் 356 ரன்கள் குவித்துள்ளார் ருத்ராஜ். ஜெய்ஸ்வால் 263 ரன்களும், சுப்மான் கில் 201 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளனர். அதேபோல், சூர்யகுமார் யாதவ் 197 ரன்களும், ஹர்திக் பாண்டியா 158 ரன்களும் மட்டுமே குவித்துள்ளனர். இவர்களில் ருத்ராஜ் கெய்க்வாட் முதலிடத்தில் இருந்தும் அவருக்கு இலங்கை டூரில் இடம் கிடைக்காததை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதேபோல், இந்திய டி 20 அணிக்கு ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவை டிக் செய்துள்ளார் கோச் கவுதம் கம்பீர். ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் காரணமாக ஓய்வெடுக்க சென்றுவிடுவதால், அவரை விட கேப்டனுக்கு சூர்யகுமார் யாதவ் சரியான தேர்வாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். முக்கியமாக 2026 டி20 உலகக் கோப்பை தொடரே மனதில் வைத்தே சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரையும் ஒருநாள் அணிக்கு ரோஹித் ஷர்மா தான் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் டி20, ஒருநாள் போட்டி என இரண்டுக்கும் சுப்மான் கில் உதவி கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
What's Your Reaction?






