TNPL Champions 2024 : ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சாம்பியன்!
Dindigul Dragons won TNPL t20 Cricket Champions 2024 : பைனலில் அரைசதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின்(Ravichandran Ashwin) ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த தொடரில் மொத்தம் 225 ரன்களும், 13 விக்கெட்களும் வீழ்த்திய ஷாருக்கான் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
Dindigul Dragons won TNPL t20 Cricket Champions 2024: தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக விளங்கி வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் (TNPL Cricket) டி20 தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியும் பைனலில் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 129 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் எஸ் சுஜய் 12 பந்தில் 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் ராம் அரவிந்த் (27 ரன்), அதீக் உர் ரஹ்மான் (17 பந்தில் 25 ரன்) அதிரடியாக விளையாடி அணி சவாலான இலக்கை எட்ட வைத்தனர்.
பெரிதும் எதிர்பரக்கப்பட்ட கேப்டன் ஷாருக்கான் 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். திண்டுக்கல் அணி தரப்பில் சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி மற்றும் விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்பு சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது பரிதவித்தது.
பின்பு கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வினும், பாபா இந்திரஜித்தும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி விளாசிய அஸ்வின் 46 பந்தில் 52 ரன் எடுத்தார். பாபா இந்திரஜித் 35 பந்தில் 32 ரன் அடித்து அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் சரத்குமார் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 15 பந்தில் 27 ரன்கள் அடித்து திண்டுக்கல் அணியை வெற்றி பெற வைத்தார்.
18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிஎன்பிஎல்(TNPL) கிரிக்கெட்டில் முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. திண்டுக்கல் தரப்பில் கௌதம் தாமரை கண்ணன், மணிமாறன் சித்தார்த், வள்ளியப்பன் யுதீஸ்வரன், ஷாருக்கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள் பைனலில் அரைசதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த தொடரில் மொத்தம் 225 ரன்களும், 13 விக்கெட்களும் வீழ்த்திய ஷாருக்கான் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் டிராகன்ஸ்(Dindigul Dragons) அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், ''இந்த தொடரின் தொடக்கத்தின் எங்கள் அணி சரியாக விளையாடவில்லை. ஏராளமான கேட்ச்களை தவற விட்டோம். ஆனால் அதன்பிறகு அனைத்து வீரர்களும் தவறுகளை திருத்திக் கொண்டு ஒவ்வொரு ஆட்டத்திலும் முன்னேற்றம் அடைந்து வந்தனர். டிஎன்பிஎல்(TNPL 2024 Series) தொடர் தமிழ்நாடு(Tamil Nadu) வீரர்களின் திறமை வெளியுலகத்துக்கு தெரிய காரணமாக இருந்து வருகிறது'' என்றார்.
What's Your Reaction?