விளையாட்டு

ஜோ ரூட் படைத்த முக்கிய சாதனை.. புதிய மைல்கல்லை எட்டியது எப்படி?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார். 

ஜோ ரூட் படைத்த முக்கிய சாதனை.. புதிய மைல்கல்லை எட்டியது எப்படி?

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியானது முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில்,  இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் எடுத்தார். அப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற அசாத்திய சாதனையை ஜோ ரூட் படைத்தார். 

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.  அதன்படி, முதல் இன்னிங்ஸ்க்கு சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி 149 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 556 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் விக்கெட்டை விரைவில் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய ஜோ ரூட், அவரது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

உலக சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 5133 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.