தமிழ்நாடு

Chennai Crime News: மகளுடன் சித்தப்பா காதல்... அட கொடுமையே..! கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்?

மகளை காதலித்த சித்தப்பா... கல்லூரியில் சக மாணவர்களுடன் பேசக்கூடாது என வாக்குவாதம்... மகளின் கையை அறுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chennai Crime News: மகளுடன் சித்தப்பா காதல்... அட கொடுமையே..! கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்?
Chennai Crime

சென்னை: முறை தவறிய காதலால் 20 வயது இளம் பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணின் அம்மா, 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண் அவரது சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக சித்தியின் கணவர் ரவிச்சந்திரன், அந்த மாணவியின் மீது காதல் வயப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  

ஒருகட்டத்தில் சித்தப்பாவுக்கும் மகளுக்கும் இடையே காதல் கதை அவர்களது உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரையும் எச்சரித்ததோடு, இளம் பெண்ணையும் சென்னையில் தங்கி படிக்க வைத்துள்ளனர். அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் அந்த இளம் பெண் படித்து வந்துள்ளார். ஆனாலும் சித்தப்பா ரவிச்சந்திரன், இளம் பெண் மீதான காதலை கைவிட மறுத்ததாக சொல்லப்படுகிறது. தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் அடிக்கடி சென்னை வந்துள்ள அவர், இளம் பெண்ணை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.  

அதேபோல், இளம்பெண்ணை பார்த்து அவரது செலவுக்கு பணம் கொடுப்பதுடன், கல்லூரியில் சக மாணவர்களுடன் பேசக்கூடாது எனவும் ஆர்டர் போட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், பயிற்சி வகுப்புக்குச் சென்ற இளம்பெண்ணை சாலையின் நடுவே வழிமறித்த ரவிச்சந்திரன், சக மாணவர்களுடன் பேசக்கூடாது என மீண்டும் சண்டையிட்டுள்ளார். இதனால் ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட அது விபரீதத்தில் போய் முடிந்துள்ளது. 

 
அதாவது, சித்தப்பா ரவிச்சந்திரன், ஆத்திரத்தில் தான் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து இளம் பெண்ணின் மணிக்கட்டுப் பகுதியை அறுத்துள்ளார். இதனால் அந்த இளம் பெண் வலி தாங்க முடியாமல் அழவே, அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் அதே கத்தியால் தனது வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து இளம் பெண்ணும், அவரது சித்தப்பா ரவிச்சந்திரனும் கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் உயிரிழந்தார். இளம் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சித்தப்பாவுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையேயான காதல் கத்திக் குத்தில் போய் முடிய, கடைசியாக ரவிச்சந்திரன் தற்கொலையும் செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் கோயம்பேடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.