Atal Setu Bridge Viral Video : பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்... துணிச்சலாக காப்பாற்றிய கார் டிரைவர்... வைரலாகும் வீடியோ!

Atal Setu Bridge Viral Video : மும்பையில் அடல் சேது பாலத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aug 17, 2024 - 10:56
Aug 17, 2024 - 14:52
 0
Atal Setu Bridge Viral Video : பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்... துணிச்சலாக காப்பாற்றிய கார் டிரைவர்... வைரலாகும் வீடியோ!
பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்... துணிச்சலாக காப்பாற்றிய கார் டிரைவர்

Atal Setu Bridge Viral Video : இப்போதெல்லாம் சமூக வலைதளத்தை திறந்தாலே, நம்மை அதிர்ச்சியூட்டும் விதமாக பல வீடியோக்களை தினந்தோறும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் மும்மையை சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற காணொளி ஒன்று தற்போது காட்டுத்தீ போல் பரவி வைரலாகி வருகிறது.

மும்பையில் அடல் சேது என்ற பாலம் உள்ளது. அந்த பாலத்தின் தடுப்புச் சுவர் அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரது செயல்களில் சில தடுமாற்றம் இருப்பதைக் கண்ட கார் ஓட்டுநர் ஒருவர் மெதுவாக அப்பேண்ணின் அருகில் வந்து நின்றுள்ளார். இதையடுத்து மெதுவாகப் அப்பேண்ணிடம் பேச்சும் கொடுத்துள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதாமாக அப்பெண் பாலத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை சுதாரித்துக்கொண்ட அந்த கார் ஓட்டுநர், தடுப்புச்சுவற்றுக்கு உள்ளே நின்றபடியே மின்னல் வேகத்தில் அப்பெண்ணின் தலைமுடியை இருக்கமாகப் பற்றிக்கொண்டு அவர் கீழே விழுந்திடாதபடி பிடித்துக்கொண்டார். 

இதைக்கண்ட அருகிலிருந்த காவல்துறையினர், உடனடியாக அங்கு விரைந்து துரிதமாக செயல்பட்டு பாலத்தில் தொங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றினர். இதையடுத்து அவரை பத்திரமாக மீட்ட அவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற நபர் ரீமா முகேஷ் படேல் என்பதும், அவர் முன்மையின் வடகிழக்கில் உள்ள புறநகரான முலுண்டில் வசிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தின் சிசிடிவி காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் துரிதமாக செயல்பட்டு அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய கார் ஓட்டுநர் மற்றும் காவல்துறையினரின் செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.  

மேலும் படிக்க: சென்னை பீச் – எழும்பூர் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து... பயணிகள் அலர்ட்!

Suicidal Trigger Warning:

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow