Chennai Beach To Egmore Electric Train : சென்னை பீச் – எழும்பூர் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து... பயணிகள் அலர்ட்!

Chennai Beach To Egmore Station Electric Train Canceled : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையேயான இரவு நேர மின்சார ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Aug 17, 2024 - 15:53
Aug 17, 2024 - 20:16
 0
Chennai Beach To Egmore Electric Train : சென்னை பீச் – எழும்பூர் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து... பயணிகள் அலர்ட்!
சென்னை கடற்கரை - எழும்பூர் மின்சார ரயில்கள் ரத்து

Chennai Beach To Egmore Station Electric Train Canceled : கடந்த சில தினங்களாக சென்னையில் மின்சார ரயில்களின் வழித்தடங்களில் பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தற்போது சென்னை பீச் டூ எழும்பூர்(Chennai Beach To Egmore) இடையேயான இரவுநேர ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம், சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் பரமாரிப்பு பணிகள் நடைபெறுவதால், இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து நாளை (ஆக.18) ஞாயிறு அன்று இரவு, 9.55, 10.10, 10.40, 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை பீச் வரை செல்லும் மின்சார ரயில்கள், எழும்பூர் – கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. 

அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து நாளை இரவு 10.30, 11.00, 11.20, 11.40, 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், நாளை மறுநாள், அதாவது ஆக.19ம் தேதி திங்கட் கிழமை அதிகாலை 3.55 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் புறப்படும் மின்சார ரயிலும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க - இஸ்ரோவிற்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க இடம் வழங்கிய தமிழக அரசு!

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு(Chennai Beach Station) நாளை இரவு 10.10, 11.00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் – கடற்கரை(Egmore To Chennai Beach) வரை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து நாளை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருமால்பூரில் இருந்து நாளை இரவு 8.௦௦ மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில், எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow