விஜயகாந்த் நினைவு தினம்... மாசற்ற மனதுக்கும், தூய அன்புக்கும் சொந்தக்காரர் - மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வையொட்டி தேமுதிக தொண்டர்களும், பொதுமக்களும், நிர்வாகிகளும் பேரணியாக செல்லும் நிலையில், கோயம்பேடு மக்கள் வெள்ளத்தில் நிரம்பியுள்ளதால, சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு நாள்தோறும் பூஜையும், அன்னதானமும் செய்யப்பட்டு வரும் நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்திற்கு சமூகவலைதளத்தின் வாயிலாக புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மாசற்ற மனதுக்கும், தூய அன்புக்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் கேப்டன் விஜயகாந்தை நினைவுகூர்கிறேன்” எனத் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் குருபூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முதல் தவெக தலைவர் விஜய் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்குமாறு தேமுதிக தலைமை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெறும் குருபூஜையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?