Breaking: தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து அதிரடி... மேலும் 32 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழக காவல்துறையில் ஒரேநாளில் 58 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலில் 24 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து மேலும் 32 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் 24 போலீஸ் எஸ்பிக்களை இடமாற்றம் செய்து இன்று (ஆக.08) மதியம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது எஸ்பி அந்தஸ்தில் இருக்கும் 32 அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சர்ச்சையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிகாரிக்கும் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தீவிரவாத தடுப்பு பிரிவு கோவையின் எஸ்பியாக இருந்த சசிமோகன் சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், உயர்நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு உதவி ஐஜியாக மாற்றம்.
தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8-வது பட்டாலியன் கமாண்டன்டாக இருந்த ஓம்பிரகாஷ் மீனா, தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு உதவி ஐஜியாக மாற்றம்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் போலீஸ் எஸ்பியாக இருந்த எஸ்.மகேஷ்வரன் ஆவடி காவல் ஆணையரக தலைமையக பிரிவு துணை ஆணையராக மாற்றம்.
ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ஜெயலட்சுமி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் போலீஸ் எஸ்பியாக மாற்றம்.
மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக இருந்த சாம்சன், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் எஸ்பியாக மாற்றம்.
கோவை மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த பத்ரி நாராயணன், கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக மாற்றம்.
தமிழக காவல்துறை நிர்வாகப்பிரிவு உதவி ஐஜியாக இருந்த தீபா சத்யன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13-வது பட்டாலியனின் கமாண்டன்டாக மாற்றம்.
சென்னை தியாகராயநகர் காவல் துணை ஆணையராக இருந்த அங்கீத் ஜெயின், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8-வது பட்டாலியனின் கமாண்டன்டாக மாற்றம்.
சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக இருந்த ஈஸ்வரன், சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பியாக மாற்றம். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை அடுத்து இவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தாம்பரம் காவல் ஆணையரக தலைமையக பிரிவு துணை ஆணையராக இருந்த மணி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-வது பட்டாலியனின் கமாண்டன்டாக மாற்றம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை தொடர்ந்து அப்போது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் எஸ்பியாக இருந்த செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது அவருக்கு தாம்பரம் காவல் ஆணையரக தலைமையக பிரிவு துணை ஆணையராக பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த சுரேஷ் குமார், தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பியாக மாற்றம்.
வெளிநாடு வாழ் இந்தியர்களை கண்காணிக்க உதவும் பிரிவின் எஸ்பியாக இருந்த சண்முகப்பிரியா, சிபிசிஐடி போலீஸ் எஸ்பியாக மாற்றம்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீஸ் எஸ்பியாக இருந்த மயில்வாகனன், மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக மாற்றம்.
சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையராக இருந்த உமையாள், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையராக மாற்றம்.
திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்பியாக இருந்த செந்தில்குமார், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் நிர்வாகப்பிரிவு துணை ஆணையராக மாற்றம்.
சிறப்பு அதிரடிப்படை போலீஸ் எஸ்பியாக இருந்த ராஜன், திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்பியாக மாற்றம்.
பெரம்பலூர் மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த சியாமளாதேவி, திருச்சி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக மாற்றம்.
தர்மபுரி மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த ஸ்டீபன் ஜேசுபாதம், மாநில உளவுத்துறை எஸ்பி -2 ஆக மாற்றம்.
தூத்துக்குடி மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த பாலாஜி சரவணன், கோவை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்பியாக மாற்றம்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த மீனா, வெளிநாடு வாழ் இந்தியர்களை கண்காணிக்க உதவும் பிரிவு எஸ்பியாக மாற்றம்.
தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாக இருந்த ஸ்டாலின், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய பிரிவு எஸ்பியாக மாற்றம்.
கோவை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருந்த சந்திரசேகரன், மதுரை மாவட்ட மதுவிலக்கு அலாக்கப்பிரிவு எஸ்பியாக மாற்றம்.
மதுரை நகர போக்குவத்து துணை ஆணையராக இருந்த குமார், சென்னை கடல்சார் அமலாக்கப் பிரிவு எஸ்பியாக மாற்றம்.
சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பியாக இருந்த அன்பு, ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து துணை ஆணையராக மாற்றம்.
திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருந்த சுஜாதா, திருப்பூர் நகர வடக்குப்பிரிவு துணை ஆணையராக மாற்றம்.
தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக இருந்த வனிதா, மதுரை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக மாற்றம்.
மதுரை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக இருந்த விஜய கார்த்திக் ராஜ், நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும எஸ்பியாக மாற்றம்.
வேலூர் மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த மணிவண்ணன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2- வது பட்டாலியனின் கமாண்டன்டாக மாற்றம்.
திருப்பூர் நகர வடக்கு பிரிவு காவல் துணை ஆணையராக இருந்த ராஜராஜன், திருப்பூர் நகர காவல் தலைமையக துணை ஆணையராக மாற்றம்.
கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ரோகித் நாதன் ராஜகோபால், ராமநாதபுரம் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும எஸ்பியாக மாற்றம்.
What's Your Reaction?