D Jayakumar on Deputy Chief Minister Qualification : இது குறித்து கூறியுள்ள ஜெயக்குமார், “ஃபார்முலா கார் ரேஸ் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். கண்டிப்பாக இந்த ரேஸ் நடக்கக்கூடாது. நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் உள்ளது. சட்ட ஒழுங்கு கஞ்சா போதை கொலை கொள்ளை கற்பழிப்பு ஆள் கடத்தல் உள்ளிட்டவை சகஜமாக நடக்கிறது.
பேருந்துகளை குறைத்து விட்டார்கள். பேருந்துகள் ஒழுங்காக உள்ளதா? காயிலாங் கடைக்கு செல்லும் அளவிற்கு உள்ளது. அதை சீர் செய்து பணத்தை செலவு செய்து புதிய பேருந்துகளை வாங்கலாம். மழைக்காலம் தொடங்க உள்ளது எத்தனை பேருந்துகள் ஒழுகப் போகிறது பாருங்கள்.
கழிவு நீரும் குடிநீரும் கலந்து அதன் மூலம் வியாதிகள் பரவுகிறது அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு பல பிரச்சினைகளால் தீப்பிடித்து எரியும் பொழுது ரோம் நாடு தீப்பிடித்து எரிந்த பொழுது கருவி வாசித்தது போல் உள்ளது தமிழக முதலமைச்சர் செயல்பாடு உள்ளது” என்றார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “அவர்கள் யாரை வேண்டுமானாலும் மந்திரியாக ஆக்கட்டும். ஆனால் அதற்கு ஒரு தகுதி வேண்டாமா? அடாவடித்தனம், கட்டப்பஞ்சாயத்து எல்லாம் இருந்தால்தான் மந்திரியாக முடியும். அதுதான் அடிப்படையான தகுதி என்று ஆக்கிவிட்டது.
தா.மோ.அன்பரசனுக்கு என்ன தகுதி உள்ளது கள்ளச்சாராயம் காய்ச்சிய குடும்பம். கலைஞருக்கு கொத்தடிமையாக இருந்தார்; ஸ்டாலினுக்கு கொத்தடிமையாக இருந்தார்; இப்பொழுது உதயநிதிக்கு உள்ளார்; நாளை இன்பநிதிக்கும் இருப்பார். இவருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பேச என்ன தகுதி உள்ளது? மறைந்தவர்கள் மீது கொச்சையாக விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம்?
இன்றும் போற்றப்படும் பாராட்டப்படும் உலகம் போற்றும் தலைவியாக ஜெயலலிதா உள்ளார். கருணாநிதி ஸ்டாலினை யாரும் அப்படி பேசுகிறார்களா? அப்படி போற்றப்படும் அவரை சிறுமைப்படுத்தும் வகையில் நாக்குசம் வகையில் ஒரு அருகதையும் இல்லாமல் பட்டா இல்லாத புறம்போக்கு தருதலை இதுபோல் தொடர்ந்து பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக செயலாற்றி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் வழங்கப்படலாம் என ஊகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.