ஆளுநர் ஆர்.என்.ரவி தான் அறிவாளி.. ஞானம் இல்லாதவன் பகுத்தறிவுவாதியா?.. ஹெச்.ராஜா அதிரடி
மெத்தப்படித்த அறிவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார். அதனால் உண்மைகள் மக்களுக்கு சொல்கிறார் என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மெத்தப்படித்த அறிவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார். அதனால் உண்மைகள் மக்களுக்கு சொல்கிறார் என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Udhayanidhi Stalin as Deputy CM : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது. நேற்று அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ADMK Sellur Raju Reply To DMK Minister TM Anbarasan : ''32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக தான். அதிமுகவில் இன்றைக்கு கீழே இருக்கிறவர்கள் மேலே வர முடியும். எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்தவர்'' என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
Pa Valarmathi on Minister Anbarasan : அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன் என்றும் அமைச்சர் பதவியில் பிழைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் மந்திரி அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும் என்றும் அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
D Jayakumar on Deputy Chief Minister Qualification : துணை முதல்வர் பதவி வழங்குவதற்கு ஒரு தகுதி வேண்டாமா? அடாவடித்தனம், கட்டப்பஞ்சாயத்து எல்லாம் இருந்தால்தான் மந்திரியாக முடியும். அதுதான் அடிப்படையான தகுதியா என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.