GOAT First Half Review: ”இதுதான்டா சினிமா... சும்மா தெறிக்குதே” கோட் ஃபர்ஸ்ட் ஆஃப் விமர்சனம்!
விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கோட் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாதி எப்படி இருக்கிறது என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அதனை தற்போது பார்க்கலாம்.
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் கோட் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கே கோட் திரைப்படம் ரிலீஸானது. இதனையடுத்து இப்படத்தின் முதல் பாதி எப்படி இருக்கிறது என நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
கோட் படத்தின் முதல் பாதி குறித்து சோஷியல் மீடியா ட்ராக்கர் அமுதபாரதி பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்துள்ளார். முதல் பாதி சிறப்பாக வந்துள்ளதாகவும், ஓபனிங் சீன் தாறுமாறாக வந்துள்ளது, செம சஸ்பென்ஸ் என குறிப்பிட்டுள்ளார். விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு செம சார்மிங்காக இருப்பதாகவும், ஃபேமிலி போர்ஷன்ஸ் எமோஷனலாக கனெக்ட் ஆகியுள்ளது. சினேகா கேரக்டரும் சூப்பர் எனக் கூறியுள்ளார். போர் அடிக்கும் வகையில் எந்த காட்சியும் இல்லை, இடைவேளை காட்சியில் செம ட்வீஸ்ட் உள்ளது என ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல், சோஷியல் மீடியா சினிமா ட்ராக்கர் லக்ஷ்மி காந்த், கோட் படத்தின் முதல் பாதி சூப்பர் என பாராட்டியுள்ளார். கோட் படத்தின் திரைக்கதை செம மாஸ் எனவும், இது வெங்கட் பிரபுவின் மாஸ் என்டர்டெயினிங் மூவி என்றும் குறிப்பிட்டுள்ளார். தளபதி விஜய் படத்தை மொத்தமாக தனது தோளில் சுமந்துள்ளார், சார்மிங் லுக்கில் செம ஆக்டிங் என தெரிவித்துள்ளார். அதேபோல், விஜய்யின் என்ட்ரி செம சர்ப்ரைஸ்ஸாகவும் ஸ்டைலிஷாகவும் உள்ளது. முதல் பாதி முழுவதும் செம ஃபன் மொமண்ட் தான், எமோஷனல், அடுத்தடுத்து வரும் ஆக்ஷன் காட்சிகள் சூப்பர். விசில் போடு பாடலின் அப்டேட் வெர்ஷன் அமர்க்களமாக உள்ளது. ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் வெங்கட் பிரபு என விமர்சனம் கொடுத்துள்ளார்.
கோட் முதல் பாதி குறித்து பதிவிட்டுள்ள சினிமா ட்ராக்கர் ராஜசேகர், படத்தின் ஆரம்பம் சூப்பர், வின்டேஜ் ப்ளஸ் காமெடி, விஜய்யின் ஆக்ஷன் சீன்ஸ், இன்டர்வெல் பிளாக் எல்லாமே செம ட்வீஸ்ட். விஜய் எல்லா ஏரியாவிலும் ராக்கிங் பெர்ஃபாமன்ஸ் செய்துள்ளார். அதேபோல், விஜய்யின் டீ-எஜிங் லுக் சூப்பராக வந்துள்ளது. வெங்கட் பிரபு பக்கா கமர்சியல் மூவியாக கோட் படத்தை இயக்கியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
கோட் முதல் பாதிக்கு 4.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளது Let's X OTT GLOBAL தளம். இதுதான்டா சினிமா என பாராட்டியுள்ள Let's X OTT GLOBAL தளம், விஜய்யின் என்ட்ரி எதிர்பாராத ஒன்று. விசில் போடு பாடல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது. நிச்சயமாக இந்தப் படம் ரோலர் கோஸ்டர் ரெய்டு தான். எதிர்பாராத ட்வீஸ்ட் நிறைய இருக்கின்றன, இடைவேளை காட்சி ஹாலிவுட் தரத்தில் உள்ளது. தளபதி விஜய்யின் பெர்ஃபாமன்ஸ், டீ-ஏஜிங் விஜய்யின் காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் எல்லாம் தியேட்டரை தெறிக்கவிடுகிறது என விமர்சனம் செய்துள்ளது.
What's Your Reaction?