விஜய் கொடுத்த விருந்து.. ஸ்பெஷல் ஐட்டம் வெற்றிலை பாயாசம் ருசி.. சமையல் கலைஞர் சொன்ன ரகசியம்

வெற்றிலைப் பாயசம்தான் விஜய்க்கு அதிகம் பிடித்தது என்று கல்வி விருது வழங்கும் விழாவில் சுவையாக விருந்து சமைத்த சமையல் கலைஞர் கூறியுள்ளார். ருசியாக சமைக்கும் கலைஞர்களை நளபாகம் என்று சொல்வார்கள். சமையலின் ருசி பிடித்துப்போனால் எந்த விசேஷம் என்றாலும் எங்கிருந்தாலும் அவர்களை சமைக்க கூப்பிடுவார்கள். அப்படித்தான் விஜய் கொடுத்த விருந்தில் சமையல் செய்த புதுச்சேரி சமையல் கலைஞர்களைப் பற்றி ருசிகரமான தகவல் கிடைத்துள்ளது.

Jul 4, 2024 - 17:27
 0
விஜய் கொடுத்த விருந்து.. ஸ்பெஷல் ஐட்டம் வெற்றிலை பாயாசம் ருசி.. சமையல் கலைஞர் சொன்ன ரகசியம்
Vijay function payasam

பத்தாம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளைத் தொகுதி வாரியாக கண்டறிந்து அவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிவருகிறார் தவெக தலைவர் விஜய். இதற்கான இரண்டாம் கட்டமாக விழா நேற்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.விழாவிற்கு வந்த மாணவ மாணவிகளுக்கு சுவையான மதிய விருந்து கொடுக்கப்பட்டது. அந்த விருந்தில் கொடுக்கப்பட்ட பாயாசத்தின் ருசி பற்றிதான் அதிகம் பேசப்பட்டது.

நேற்று நடந்த விழாவில் 800 பேருக்கு விருந்து படைக்கப்பட்டது. அதில் மலாய் சாண்ட்விச், ஆக்ரா பான் ஸ்வீட், அவியல், வெங்காய மணிலா பக்கோடா, வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல் உள்ளிட்ட வெவ்வேறு விதமான உணவுகளை தயார் செய்திருந்தனர்.

விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் புதுச்சேரியிலிருந்து சமையல் செய்வதற்காக ஒரு குழு வந்திருந்தது. அந்த கேட்ரிங் முதலாளி, ரவி பிரபு சமையல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர், "விஜய் கட்சியில் பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் மகள் கல்யாணம் புதுச்சேரியில் நடந்தது. அதற்கு விஜய் வந்திருந்தார். அவருக்கு எங்கள் சமையல் பிடித்துப் போனது. அப்போது ஏற்பட்ட அறிமுகம் காரணமாகவே அதே குழுவினரை சென்னைக்கு அழைத்து விருந்து சமைக்க கூறியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய புதுச்சேரியை சேர்ந்த கேட்டரிங் உரிமையாளர் ரவி, நாங்கள் 45 ஆண்டுகளாக சமையல் துறையில் இருந்து வருகிறோம். புதுவையில் புஸ்ஸி ஆனந்த் வீட்டு திருமணத்தில் நாங்கள் சமைத்தோம். அப்போது அந்த நிகழ்வில் விஜய் கலந்து கொண்டு சாப்பிட்டார். அவர் எங்களது சமையல் குறித்து கேட்டறிந்துள்ளார். பின்னர் எங்களுக்கு இந்த ஆர்டரை வழங்கினார். 


கல்வி விருது வழங்கும் விழாவில்  250 பேர் சமையல் ஆட்கள் வந்திருந்தோம். அதில் 200 பேர் உணவு பரிமாறும் வேலை செய்தார்கள். 50 பேர் சமையல் செய்ய இருந்தார்கள். அது போக எங்கள் சமையல் வேலைகளுக்கு உதவியாக விஜய் கட்சியினர் 50 பேர் இருந்தனர். அவர்களின் உதவியால் வேலைகள் இன்னும் சீக்கிரமாகச் செய்ய முடிந்தது. மலாய் சான்விச் ஸ்வீட், ஆக்ராபான் ஸ்வீட், இஞ்சிப் புளித் துவையல், மாங்காய் ஊறுகாய், அவரைக்காய் மல்லாட்டை பொரியல், உருளைக்கிழங்கு பட்டாணி காரக்கறி, அவியல், கூட்டு, வெங்காயம் மல்லாட்டை பகோடா, பருப்புப் பொடி சாதம், விஜிடபுள் பிரியாணி, எண்ணெய்க் கத்திரிக்காய் வத்தக் குழம்பு, மாங்காய் மற்றும் முருங்கைக்காய் போட்டு சாம்பார், தக்காளி ரசம், வெங்காய வடை, அப்பளம், வெற்றிலை பாயசம், மோர் எனத் தடபுடலாகச் சமைத்துக் கொடுத்தோம்.இங்கு சமைத்ததிலேயே வெற்றிலைப் பாயசம்தான் ஸ்பெஷலான ஐட்டம்.இந்தப் பாயசத்தை விஜய் விரும்பி சாப்பிட்டார் என்கிறார் ரவி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow