TVK First Maanadu : தவெக முதல் மாநாடு பந்தக்கால் விழா.... குவிந்த தொண்டர்களால் பெரும் பரபரப்பு!

TVK First Maanadu : தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு பந்தக்கால் நடும் விழா வெகு விவரசையாக நடைபெற்றது.

Oct 4, 2024 - 13:12
Oct 4, 2024 - 21:33
 0
TVK First Maanadu : தவெக முதல் மாநாடு பந்தக்கால் விழா.... குவிந்த தொண்டர்களால் பெரும் பரபரப்பு!
தவெக முதல் மாநாடு பந்தல்கால் விழா

TVK First Maanadu : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடத்த அக்கட்சி திட்டமிட்டது. அதனை தொடர்ந்து விழுப்புர மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். அதை பரிசீலித்து  காவல்துறை 17 கடும் நிபந்தனைகளுடன் இந்த மாதம் 27ஆம் தேதி மாநாடு(TVK Maanadu Date) நடத்த அனுமதித்தது. 

மாநாடு நடத்த இன்னும் 21 நாட்களில் உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய தமிழக வெற்றி கழகம்(Tamilaga Vetri Kazhagam) தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் அடிப்படையில்  பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நிகழ்வு நேற்று (அக். 4) காலை 4:30 முதல் 6 மணி வரை பிரம்ம முகூர்த்தத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று (அக். 4) காலை சுமார் 5 மணி அளவில் பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த பந்தக்கால் நிகழ்வின் முதல் நிகழ்வாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்(Bussy Anand) கலந்து கொண்ட கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மற்றும் கோயில்களில் இருந்து அங்கு அர்ச்சனை மற்றும் பிரார்த்தனை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் புனித நீர் வரவழைக்கப்பட்டன. இதையடுத்து இந்த பொருட்கள் மற்றும் புனிதநீர் கொண்டு பந்தக்கால் நிகழ்வு வேத மந்திரங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது. அப்போது கட்சியின் தொண்டர்கள் கட்சியின் தலைவர் விஜய் வாழ்க, வருங்கால முதலமைச்சர் வாழ்க என கோஷம் எழுப்பி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வுக்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நடிகர் விஜய் நேரடியாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாகத் தகவல் பரவியதின் அடிப்படையில் அங்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow