இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்... உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக மீனவர் சங்கம்!

Tamil Nadu Fishermen Hunger Strike : சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்ககளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (அக். 3) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Oct 4, 2024 - 12:34
Oct 4, 2024 - 18:14
 0
இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்... உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக மீனவர் சங்கம்!
உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக மீனவர் சங்கம்

Tamil Nadu Fishermen Hunger Strike : இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளில் கச்சத்தீவும் ஒன்றாக காணப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து  24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கச்சத்தீவுக்கு. இந்த தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமான நிலப்பரப்பாகவே இருந்தது. ஆனால் 1974ம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டை கலந்து ஆலோசிக்காமலேயே கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது. 

இதன்பிறகு கச்சத்தீவு அருகே தமிழ்நாட்டு மீனவர்கள்(Tamil Nadu Fishermen) மீன்பிடிக்காலம் என்கிற உரிமைகள் இணைக்கப்பட்டு 1976ம் ஆண்டு இன்னொரு ஒப்பந்தம் உருவானது. ஆனால் இதனை இலங்கை அரசு அப்போதிலிருந்து தற்போது வரை அதை கண்டுக்கொள்ளவில்லை.

இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்.டி.ஐ தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், 1961ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு, குட்டித் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டி அவசியமில்லை எனவும் இதனால் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாகவும் கூறியதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கியில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதிக்கு இது தெரியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அண்ணாமலை வெளியிட்ட இந்த தகவல் போலியாக கூட இருக்கலாம் என்றெல்லாம் மறுத்து வந்தது காங்கிரஸ். இப்படியான அரசியல் குழப்பங்கள் கச்சத்தீவை சுற்றி நடந்து வருகிறது.

இதனால், கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் படகுகள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்து அரசுக்கு சொந்தமானதாக ஆக்குவதும் தொடர்ந்து நடந்துக்கொண்டே வருகிறது. இப்படியான ஒரு சூழலில் தான் மீனவர்கள் கடலுக்கு தினமும் சென்று வருகின்றனர். 

இந்நிலையில் 5 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 17 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். அதோடு மீனவர்கள் சென்றிருந்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்கள் மற்றும் அனைத்து படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் நேற்று (அக். 3) அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், “இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த அனைத்து மீனவர்களையும், ஏற்கனவே அபராதம், தண்டனை விதித்து சிறையில் அடைத்துள்ள மீனவர்களையும் எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படை பறிமுதல் செய்த அனைத்து படகுகளையும் மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்க இயலாத படகுகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow