Top 10 TV Serials List 2024 : சன் டிவியின் சிங்கப்பெண்ணே டாப்.. டஃப் கொடுக்கும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை

Singapenne No 1 in Top 10 TV Serials List 2024 : கிராமத்து கதைக்களத்திற்கு வந்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே டிவி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 1 இடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை டிவி சீரியல் இடம் பெற்றுள்ளது.

Aug 23, 2024 - 12:40
Aug 24, 2024 - 10:04
 0
Top 10 TV Serials List 2024 : சன் டிவியின் சிங்கப்பெண்ணே டாப்.. டஃப் கொடுக்கும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை
tv serial trp ratings

Singapenne No 1 in Top 10 TV Serials List 2024 : தொலைக்காட்சிகளில் தினசரியும் 50க்கும் மேற்பட்ட டிவி சீரியல்கள் ஒளிபரப்பானாலும் சன் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிவி சீரியர்களுக்கு இடையேதான் போட்டி நிலவி வருகிறது. வாரா வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த வாரம் டாப் 10 வரிசையில் இடம் பிடித்துள்ள டிவி சீரியல்கள் எவை எவை என்று பார்க்கலாம்.

சன் டிவி தொலைக்காட்சியில் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் 'சிங்க பெண்ணே' சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் நிலையில், இதற்கு காரணம் மகேஷ் என்கிற உண்மை தெரியவருமா? அல்லது அன்பு தான் பழி சொல்லுக்கு ஆளாவாரா? என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் 9.13 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது சிங்கப்பெண்ணே டிவி சீரியல். 

இதை தெடர்ந்து 8.76 டிஆர்பி புள்ளிகளுடன் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல், இரண்டாவது இடத்தை கைப்பற்றி உள்ளது. கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பல திருப்பு முனைகளுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருவதே இந்த சீரியலில் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. மீனா மீது முத்து கோவத்தில் இருந்ததால் சந்தோஷத்தில் இருந்த விஜயா, தற்போது முத்து சமாதானம் ஆகிவிட்டதால் மறுபடியும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.

கயல் - எழில் திருமணம் நடைபெறுமா? என்கிற மிகப்பெரிய கேள்வி குறியோடு சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடர் இந்த வாரம் 8.68 டிஆர்பி புள்ளிகளுடன், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில், கடந்த வாரத்துடன் முடிவடைந்த பாசமலர் அண்ணன் - தங்கைகளின் கதையை போல் ஒளிபரப்பாகி வந்த வானத்தை போல தொடர் 8.23 புள்ளிகளுடன் உள்ளது.பிக்பாஸ் கேபிரியல்லா ஹீரோயினாக நடித்து வரும் 'மருமகள்' சீரியல் 8.3 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. 

அதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட 'மல்லி' தொடர் இந்த வாரம் 7.75 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் டிஆர்பி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட 'சுந்தரி' சீரியல் மளமளவென சற்று முன்னேறி, இந்த வாரம்  7வது இடத்திற்கு வந்துள்ளது. சுந்தரியிடம் இருந்து எப்படியும் தமிழை பிரிக்க வேண்டும் என கார்த்திக் முயற்சி செய்து வரும் நிலையில், சுந்தரி தன்னுடைய குழந்தையை அவரிடம் இருந்து மீட்டு கிருஷ்ணாவை திருமணம் செய்வாரா என்கிற கடைசி அத்தியாயத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 

விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' சீரியல் 6.94 புள்ளிகளுடன்  8வது இடத்தையும், விஜய் டிவியில் இரண்டாம் பாகம் தொடரான கதிர் தங்கமயிலால் ஒரு பிரச்சனையில் சிக்கி மீண்ட நிலையில், தற்போது தங்கமயிலே தானாக சென்று புது பிரச்சினையில் சிக்கியுள்ளார். இதை எப்படி சமாளிப்பார் என பொறுத்திருந்து பார்ப்போம்.பாண்டியன் ஸ்டோர் சீரியல் 6.33 டிஆர்பி புள்ளிகளுடன் 9ஆவது இடத்தையும் கைப்பற்றி உள்ளது. 

10வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் 6.1 டிஆர்பி புள்ளிகளுடன் உள்ளது. தமிழுடன் வாழ்ந்த போது கெத்தாக இருந்த சேது... குடிக்கு அடிமையாகி தமிழையும் அவரின் குடும்பத்தியும் வெறுக்கும் நிலையில் தன்னுடைய அப்பா கைது செய்யப்பட்டதற்கு காரணம் தமிழ் இல்லை தாமரை தான் என்கிற உண்மை தெரிய வருவது எப்போது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே சன் டிவி சீரியல்களுக்கும் விஜய் டிவி சீரியல்களுக்கும் இடையே நீயா நானா போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow