Prabhas: நிஜமாவே இவரு பாகுபலி தான்... இத்தாலியில் வீடு... பிரபாஸின் மொத்த சொத்து மதிப்பு தெரியுமா?
பான் இந்தியா சூப்பர் ஸ்டாரான பிரபாஸ், இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், பிரபாஸின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம், பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் பிரபாஸ். 2002ம் ஆண்டு வெளியான ஈஸ்வர் தான் பிரபாஸின் முதல் படமாகும். ஆரம்பத்தில் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிய பிரபாஸ், பில்லா, டார்லிங், மிர்ச்சி படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக கெத்து காட்டினார். அதுவரை டோலிவுட்டில் மட்டுமே பிரபலமாக இருந்த பிரபாஸ், பாகுபலி ரிலீஸுக்குப் பின்னர் மரண மாஸ் காட்டத் தொடங்கினார். இரண்டு பாகங்களாக ரிலீஸான பாகுபலி, பிரபாஸின் ஸ்டார் வேல்யூவை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இதனால் பிரபாஸின் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகின, அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் தாறுமாறாக கலெக்ஷன் செய்தன. பாகுபலிக்குப் பின்னர் ரிலீஸான சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் படங்களுக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தன. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் சொல்லிக்கொள்ளும்படி வசூலிக்கவில்லை. ஆனால், அதன்பின்னர் ரிலீஸான சலார், கல்கி படங்கள் பிரபாஸுக்கு சூப்பரான கம்பேக் கொடுத்தன. கல்கி ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தது, இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ராஜாசாப், ஸ்பிரிட், சலார் 2, அனிமல் பட இயக்குநருடன் ஒரு படம் என படுபிஸியாக உள்ளார் பிரபாஸ்.
இன்று 45வது பிறந்தநாள் கொண்டாடும் பிரபாஸ், இதுவரை சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். நடிகை அனுஷ்காவுடன் காதல், விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளதாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரபாஸின் சொத்து மதிப்பு பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்தில் நடிக்க 150 முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் பிரபாஸ். அதேபோல், ஏராளமான பிராண்ட்களின் விளம்பரங்களில் நடித்தும் கோடிகளில் வருமானம் கிடைக்கிறது. அதன்படி, பிரபாஸின் மாத வருமானம் 10 முதல் 15 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
பிரபாஸுக்கு சொந்தமாக ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 84 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பங்களா இருக்கிறதாம். பீமாவரம் என்ற பெயரில் உள்ள இந்த பங்களாவில், 1.5 கோடி மதிப்பிலான ஹை-டெக்கான ஜிம், நீச்சல் குளம், மினி தியேட்டர், அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ள சொகுசு அறைகள், மிகப் பெரிய தோட்டம் என அரண்மனைக்கு சவால் விடும் வசதிகள் உள்ளன. இதுதவிர மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலும் பிரபாஸுக்கு சொந்தமாக வீடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக இத்தாலியில் மாதம் 40 லட்சம் ரூபாய் வாடகைக்கு வீடு ஒன்று உள்ளதாம். அதன்படி பிரபாஸின் மொத்த சொத்து மதிப்பு 250 முதல் 300 கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், பிரபாஸுக்கு கார்கள் மீதும் அதிகமான கிரேஸ் உள்ளது. 8 முதல் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ், 3.5 கோடி ரூபாய் மதிப்புக்கொண்ட Lamborghini Aventador, 2 கோடி ரூபாய் மதிப்பிலான BMW X5, தலா ஒரு கோடி மதிப்பிலான ஜாக்குவார், லேண்ட் ரோவர், ஆடி, பென்ஸ் ஆகிய கார்களை சொந்தமாக வைத்துள்ளார் பிரபாஸ். இதுதவிர மேலும் சில சொகுசு கார்கள் பிரபாஸின் கேரேஜில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஜமாகவே பாகுபலி போல வாழும் பிரபாஸின் சொத்து மதிப்பு, டோலிவுட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
What's Your Reaction?