Thalapathy 70: கமல் – அட்லீ கூட்டணியில் தளபதி விஜய்... இப்படியொரு சம்பவத்த யாருமே எதிர்பார்க்கலல?

அட்லீயின் புதிய படத்தில் கமல்ஹாசன், சல்மான்கான் நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில், தளபதி விஜய்யும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Oct 22, 2024 - 19:20
 0
Thalapathy 70: கமல் – அட்லீ கூட்டணியில் தளபதி விஜய்... இப்படியொரு சம்பவத்த யாருமே எதிர்பார்க்கலல?
அட்லீ - கமல் கூட்டணியில் இணையும் விஜய்?

சென்னை: ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, இப்போது பாலிவுட் வரை பிரபலமாகிவிட்டார். தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய்யுடன் இணைந்த அட்லீ, கடைசியாக ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கியிருந்தார். கடந்தாண்டு வெளியான ஜவான், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மாஸ் காட்டியது. இதனால் அட்லீக்காக பாலிவுட் டாப் ஹீரோக்களே வெயிட்டிங்கில் உள்ளனர். ஜவானுக்குப் பின்னர் விஜய்யின் கடைசிப் படமான தளபதி 69-ஐ அட்லீ இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தளபதி 69 இயக்குநராக H வினோத் கமிட்டாக, அந்தப் படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

இந்நிலையில், அட்லீ தற்போது கமல்ஹாசன், சல்மான்கான் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்த போது, அட்லீயும் அவரை அங்கு நேரில் சந்தித்து கதை சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்லீ சொன்ன கதைக்கு கமல்ஹாசனும் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜவான் ஹிட்டானதும் அட்லீ இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார் சல்மான்கான். 

அதனால் அவரும் அட்லீ இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இந்தப் படம் பற்றி எப்போது வேண்டுமானாலும் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அட்லீ – கமல்ஹாசன் - சல்மான்கான் இணைந்துள்ள படத்தில், தளபதி விஜய்யும் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோ படத்தில், கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் மட்டும் கொடுத்திருந்தார். இதன்மூலம் லியோ படம் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸிலும் இணைந்தது.

இதனால், அட்லீ – கமல் இருவருக்காகவும் இக்கூட்டணியில் உருவாகும் படத்தில் கேமியோவாக நடிக்க விஜய் ஓகே சொன்னதாக தெரிகிறது. அதன்படி இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு கமல்ஹாசன், சல்மான்கான் இருவருடனும் இணைந்து விஜய்யும் டான்ஸ் ஆடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பே வராத நிலையில், விஜய்யின் கேமியோ ரோல் முதல் அவரது டான்ஸ் பார்ட்டி வரை அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow