நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. அதி கனமழை.. கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்.. வானிலை மையம் வார்னிங்

Red Alert For Nilgiris : கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Jul 17, 2024 - 16:20
Jul 18, 2024 - 10:34
 0
நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. அதி கனமழை.. கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்.. வானிலை மையம் வார்னிங்
Red Alert For Nilgiris

Red Alert For Nilgiris : நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.  அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.   இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. அவலாஞ்சியில் அதிகனமழை பெய்துள்ளது. கடந்த 2 நாட்களாக 30 செமீ மேல் பதிவாகியுள்ளது. இந்த சூழலில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மேலும் கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்  கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நாளை ( ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும், ஓரிரு இடங்களில்  கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் , லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் (ஜூலை 19) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யது வாய்ப்புள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow