தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. யாருக்கெல்லாம் குடை அவசியம் செக் பண்ணுங்க

இன்றும் நாளையும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Aug 10, 2024 - 08:00
 0
தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. யாருக்கெல்லாம் குடை அவசியம் செக் பண்ணுங்க
today weather report


சென்னை: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வடதமிழக மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.சென்னையிலும் மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளுமை பரவி வருகிறது. 


கடந்த இரண்டு நாட்களில் விழுப்புரத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. மேலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. 

இந்நிலையில், தென் மேற்கு பருவமழை மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றும் நாளையும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

12ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள், 13ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரைக்கும் வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், இன்று முதல் 13ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow