Olympics: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்... இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்... அமன் ஷெராவத் அசத்தல்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் 55 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்தப் போட்டியில், 21 வயதான இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
பாரிஸ்: 33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் போட்டியில், இந்தியாவின் இளம் வீரரான 21 வயது அமன் ஷெராவத், போர்ட்டோரிக்கோ நாட்டைச் சேர்ந்த டேரியன் க்ரூஸுடன் மோதினார். 57 கிலோ ஃபீரி ஸ்டைல் பிரிவுக்கான இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அமன் ஷெராவத் அபாரமாக ஆடினார். எந்த இடத்திலும் டேரியன் க்ரூஸுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அதிரடி காட்டினார். இதனால் அமன் ஷெராவத்தின் பிடிகளில் இருந்து வெளியேற முடியாமல் டேரியன் க்ரூஸ் திணறினார்.
தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடிய அமன் ஷெராவத், 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியனை வீழ்த்தி வெண்கலப் பத்தக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என இதுவரை மொத்தம் 6 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது இந்தியா. இதனையடுத்து பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 69-வது இடம் கிடைத்துள்ளது. 21 வயதே ஆன அமன் ஷெராவத் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதை அடுத்து, பிவி சிந்துவின் சாதனையை சமன் செய்தார். அதாவது இந்தியாவில் இளம் வயதில் பதக்கம் வென்ற சாதனை பிவி சிந்துவின் வசமே இருந்தது. அதனை தற்போது மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றதன் மூலம் அமன் ஷெராவத்தும் ஈடு செய்துள்ளார்.
இந்நிலையில், மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்திற்கு, பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். அதில், இந்த வெற்றி நாட்டுக்கு மேலும் பெருமை சேர்ந்திருக்கிறது, மொத்த நாடும் உங்களின் வெற்றியை கொண்டாடி வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்ளிட்டோரும் அமன் ஷெராவத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில், அமன் ஷெராவத் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - ரசிகர்களை நெகிழ செய்த நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் அம்மாக்கள்!
இந்நிலையில், அமன் ஷெராவத் கடைசி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்துவிட்டு, அதன் பின்னரே போட்டியில் பங்கேற்றது பதக்கம் வென்றுள்ளார். அதாவது ஆடவர் 57 கிலோ எடை பிரிவுக்கான போட்டியில், அனுமதிக்கப்பட்டதை விட 4.6 கிலோ அதிகமாக இருந்துள்ளார் அமன் ஷெராவத். இதனால் 10 மணிநேரத்தில் நீரவிக் குளியல், ஓட்டம், பயிற்சிகள் மூலம் 4.6 கிலோ எடையை குறைத்துள்ளாராம். அதேபோல், இந்த பயிற்சிகளின் போது அமன் ஷெராவத்துக்கு லிக்வார்ம் வாட்டர், லெமன், தேன், காஃபி மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக எடை குறையும் வரை அவர் தூங்குவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
இதனிடையே மகளிருக்கான ரிலே ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. அதில் தமிழக வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், வித்யா ராமராஜ் அடங்கிய அணி முதல் சுற்றில் பங்கேற்றது. அணியாக அவர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாமல் இந்திய இணை ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியது. இன்றைய ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை டாகர், கோல்ஃப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளார். இப்போட்டி நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. அதேபோல், 76 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்தம் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை ரீத்திகா ஹங்கேரியை சேர்ந்த பெர்னாடெட் நாகியை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி மதியம் 2.51 மணிக்கு நடைபெறுகிறது.
What's Your Reaction?