Today Rasi Palan: இன்று நாள் எப்படி? - தினசரி பஞ்சாங்கம்.. எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

Today Rasi Palan 2024 in Tamil : சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து சில ராசிக்காரர்களுக்கு சாதக பாதகங்கள் நடைபெறும். மிதுன ராசியில் இன்று பயணம் செய்யும் சந்திரனால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Aug 1, 2024 - 06:42
Aug 2, 2024 - 10:21
 0
Today Rasi Palan: இன்று நாள் எப்படி? - தினசரி பஞ்சாங்கம்.. எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்
Today Rasi Palan 2024 in Tamil

Today Rasi Palan 2024 in Tamil : நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 16ஆம் நாள் ஆகஸ்ட் 1ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசி திதி பிற்பகல் 03.29 மணி வரை அதன் பிறகு திரயோதசி திதி. மிருகஷீரிடம் நட்சத்திரம் அதன் பிறகு திருவாதிரை திதி. இன்று தேய்பிறை பிரதோஷம். சிவ ஆலயங்களுக்கு சென்று சிவன் நந்தியை வணங்கலாம். மிதுன ராசியில் இன்றைய தினம் சந்திரன் பயணம் செய்கிறார் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்(Rasipalan) கிடைக்கும் என்று பார்க்கலாம். 

நல்ல நேரம்:

காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல் :  01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை : 04-30 மணி முதல் 07-00 மணி வரை
இரவு:    08-00 மணி முதல் 09-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

இராகு காலம் : பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம்    :   காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை          :   காலை 09-00மணி முதல் 10-30 மணி வரை

சூலம் : தெற்கு :  பரிகாரம் -  தைலம்

இன்றைய ராசி பலன்: Today Rasi Palan August 1st 2024

மேஷம்:

இன்று உங்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்:

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். 

மிதுனம்:

ராசியில் சந்திரன் பயணம் செய்வதால் மனக்கலக்கம் ஏற்படும்.  ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை செலவிட நேரிடும். வராத கடன்கள் எதிர்பாராத வகையில் வசூலாகும். வியாபார சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்:

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சகோதர சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பண வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்:

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள், தொல்லைகள் சற்று குறையும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 

கன்னி:

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறி செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் உதவியுடன் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிலும் சற்று சிக்கனமுடன் இருப்பது நல்லது.

துலாம்:

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். சந்திரன் பயணம் சாதகமாக இருப்பதால் தொல்லைகள் நீங்கும். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். தேவையில்லாமல் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு  சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

தனுசு:

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் கல்வி விஷயமாக நல்ல செய்தி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஆலோசனைகளால் தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

மீனம்

இன்று உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் உண்டாகும். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும் முதலீடுகளை தவிர்க்கவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow