Raayan Movie Actress Dushara Vijayan on Dhanush : தனுஷின் 50வது படமான ராயன் கடந்த 26ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது. அதீத வன்முறை காட்சிகள், நேர்த்தி இல்லாத கதை, திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கு சரியான முக்கியத்துவம் இல்லை என பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் அதையெல்லாம் கடந்து ராயன் சூப்பர் ஹிட்(Raayan Movie) படமாகவே அமைந்துள்ளது. தனது 50வது படத்தை தானே இயக்கி, நடித்து இயக்குநர் ப்ளஸ் ஹீரோவாக வெற்றிப் பெற்றுள்ளார் தனுஷ்(Dhanush).
அதுமட்டும் இல்லாமல் ராயன் திரைப்படம்(Raayan Tamil Film) ரிலீஸாகி ஐந்தே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராயன் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமே ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை தான் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். அதேபோல், இந்தப் படத்தில் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்தது துஷாரா விஜய்(Dushara Vijayan) என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷின் தங்கையாக துர்கா(Durga Character) என்ற கேரக்டரில் நடித்திருந்த துஷாரா விஜயன், நடிப்பில் சிறப்பாக ஸ்கோர் செய்திருந்தார். ராயன் படத்தின் கதையே துஷாரா விஜயனின் துர்கா கேரக்டரை சுற்றியே நகர்ந்தது.
ராயன் படத்தில் துஷாரா விஜயனின்(Dushara Vijayan) நடிப்பு தரமாக இருந்ததாக ரசிகர்களும் ரொம்பவே பாராட்டினர். இந்நிலையில், ராயன் வெற்றி குறித்தும் தனது நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகளுக்கும் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார் துஷாரா விஜயன். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கியுள்ள ராயன் படத்திற்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு பெரிய நன்றிகள். என் உழைப்பிற்கு கிடைத்த தங்களின் அன்பும் அரவணைக்கும் வார்த்தைகளும் என் மனதிற்கு நெருக்கமாகவே நிலைத்திருக்கும்.
மேலும் படிக்க - இவங்க தொல்லை தாங்க முடியல
படத்துவக்கம் முதல் தற்போது மாபெரும் வெற்றிப் படமாக ராயன் உருமாறியிருக்கும் வரையிலான பயணம் மிகப் பெரியது. வெகுசன மக்களிடம் என் கதாபாத்திரம் உட்பட ஏனைய பாத்திரங்களையும் கொண்டு சேர்த்ததிலும் மாபெரும் வெற்றியை உறுதி செய்ததிலும் ஊடகத்தின் பங்கு முக்கியமானது. அதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இயக்குநர் தனுஷுக்கும் சன் பிக்சர்ஸ் குழுமத்திற்கும் பெரிய, பெரிய நன்றிகளைக் கூற கடமைப்பட்டுள்ளேன். துர்காவிற்கு கிடைத்த அங்கீகாரமும் அன்பும் வெற்றியும் மக்களால் சாத்தியமானது என்றால், அது மிகையில்லை.
'ராயன்' துர்கா - நடிகை துஷாரா விஜயன் நெகிழ்ச்சி#Kumudamnews | #Kumudamnews24x7 | #kumudam | #Raayan | #dhanush | #ARrahman | #prakashraj | #Sjsurya | #Dusharavijayan | @officialdushara | @dhanushkraja pic.twitter.com/j8rumAg7KG
— KumudamNews (@kumudamNews24x7) July 31, 2024
தொடர்ந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்க உழைத்துக்கொண்டே இருப்பேன். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் கருத்தில் கொண்டு என் பயணத்தை செழுமைப்படுத்துவேன் என பதிவிட்டுள்ளார். முன்னதாக ராயன் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்த துஷாரா விஜயன் (Dushara Vijayan), அப்போதும் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். அதேபோல், படம் வெளியான அன்றே தனுஷை நேரில் சந்தித்து தனது நன்றியை கூறியிருந்தார் துஷாரா விஜயன்.
Grateful ♥️ pic.twitter.com/52qerpMIJV
— Dushara (@officialdushara) July 31, 2024