Yuvan Shankar Raja Update on Goat 3rd Single Release : லியோவை தொடர்ந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் கோட், செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. முன்னதாக, கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், விஜய்யின் ஆக்ஷன் கிளிம்ப்ஸ் வீடியோ ஆகியவை ஏற்கனவே வெளியாகிவிட்டன.
இந்த வரிசையில் கோட் படத்தின் மூன்றாவது பாடல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இதுபற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் அப்டேட் கொடுத்துவிட்ட நிலையில், தற்போது யுவன் சங்கர் ராஜாவும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார். அதன்படி தற்போது யுவன் வெளியிட்டுள்ள அப்டேட் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது. எப்போதுமே வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இருந்து வெளியாகும் அப்டேட்கள் செம ஜாலியாக இருக்கும். ஒருவரையொருவர் கலாய்த்துக்கொண்டு ரசிகர்களிடம் ஸ்கோர் செய்வார்கள்.
அதேபோல், கோட் மூன்றாவது பாடலுக்கான அப்டேட்டையும் தெறிக்கவிட்டுள்ளார் யுவன். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இவங்க தொல்லை தாங்க முடியல” என்ற கேப்ஷனுடன் ஒரு போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். அதில், தனது ஸ்டுடியோவில் இருக்கும் யுவன் செல்போனில் பேசிக்கொண்டிருக்க, வெங்கட் பிரபு தரையில் அமர்ந்தபடி தலையில் கைவைத்துள்ளார். அதாவது கோட் மூன்றாவது பாடலுக்காக வெங்கட் பிரபு காத்திருக்க, அவர்களை யுவன் கலாய்ப்பதாக இந்த போஸ்ட் அமைந்துள்ளது. அதனை குறிப்பிடவே “இவங்க தொல்லை தாங்க முடியல” என கேப்ஷன் கொடுத்துள்ளார் யுவன்.
மேலும் படிக்க - அஜித் - பிரசாந்த் நீல் மீட்டிங்... விரைவில் ஏகே 64?
இதனைப் பார்த்த ரசிகர்கள் கோட் மூன்றாவது சிங்கிள் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர். அதன்படி கோட் படத்தின் மூன்றாவது பாடல் அப்டேட் நாளை (ஆக.1) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடல் யுவன் ஸ்டைலில் Folk Song-ஆக உருவாகியுள்ளதாகவும், கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இப்பாடலில் விஜய்யுடன் த்ரிஷா நடனம் ஆடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட் மூன்றாவது சிங்கிள் பற்றிய அப்டேட் மட்டுமே நாளை வெளியாகும் என்றும், வரும் 4ம் தேதி பாடல் வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டா பதிவு #Kumudamnews | #kumudam | #Kumudamnews24x7 | #Yuvanshankarraja | #Venkatprabhu | #Vijay | #TheGOAT | #goatupdate | @thisisysr | @vp_offl | @actorvijay pic.twitter.com/1QGDKhPxTm
— KumudamNews (@kumudamNews24x7) July 31, 2024
கோட் படத்தில் விஜய்யுடன் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, அஜ்மல், யோகி பாபு, ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், லைலா உள்ளிட்ட மேலும் பலர் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் ப்ளஸ் ஃபேமிலி சென்டிமென்ட்டில் சயின்ஸ் பிக்ஷன் ஜானர் மூவியாக உருவாகியுள்ள தி கோட், இந்தாண்டு இன்டஸ்ட்ரியல் ஹிட் லிஸ்ட்டில் இணையுமா என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
View this post on Instagram