Ajith AK 64: திடீரென ஐதராபாத் பறந்த அஜித்... பிரசாந்த் நீலுடன் மீட்டிங்... ஏகே 64 அபிஸியல் அப்டேட் லோடிங்!
Actor Ajith Kumar met Director Prashanth on AK 64 Movie : அஜித்தின் ஏகே 64 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது கன்ஃபார்ம் ஆனதாக தெரிகிறது.

Actor Ajith Kumar met Director Prashanth on AK 64 Movie: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான அஜித் குமார் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. முன்னதாக மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார் அஜித். இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் தான் முடிவுக்கு வந்தது. குட் பேட் அக்லி அஜித்தின் 63வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள ஏகே 64 படத்தின் இயக்குநர் யார் என்பது தான் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன்னர் செம மாஸ்ஸான அப்டேட் ஒன்று வெளியாகி வைரலானது. அதன்படி, அஜித்தின் ஏகே 64 படத்தை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. யஷ் நடிப்பில் கேஜிஎஃப், பிரபாஸின் சலார் திரைப்படங்கள் மூலம் பான் இந்தியா சினிமாவையே தெறிக்கவிட்டவர் பிரசாந்த் நீல். இந்த இரண்டு படங்களுமே இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்ததுடன், பாக்ஸ் ஆபிஸில் கோடிகளை வாரி குவித்தன. இதனால் பிரசாந்த் நீல் இயக்கவுள்ள கேஜிஎஃப் 3, சலார் 2 படங்களுக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனிடையே ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க பிளான் செய்திருந்தார் பிரசாந்த் நீல்.
ஆனால், ஜூனியர் என்.டி.ஆரின் கால்ஷீட் இப்போதைக்கு ஃப்ரீயாக இல்லை என்பதால், அஜித்(Ajith Kumar) பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார் பிரசாந்த் நீல். கோலிவுட்டில் ஆக்ஷன் ஜானர் கேங்ஸ்டர் படங்களுக்கான ஹீரோ மெட்டீரியலாக அஜித் வலம் வருகிறார். பில்லா, மங்காத்தா என பங்கம் செய்த அஜித்துடன் பிரசாந்த் நீல் கூட்டணி வைத்தால் கேட்கவா வேண்டும். ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அஜித்தும் பிரசாந்த் நீலும் ஒரு படத்தில் இணைய வேண்டும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு சீக்கிரமே கன்ஃபார்ம் ஆகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க - ஷங்கருக்கு நோ, அட்லீக்கு கால்ஷீட்... சூர்யா அதிரடி!
அதாவது, அஜித்தின் ஏகே 64 படத்தை பிரசாந்த் நீல்(Prashanth Neel) இயக்கவுள்ளதாகவும், அதற்கான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அஜித், இன்று ஐதராபாத் சென்றிருந்தார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புக்காக தான் அஜித் ஐதராபாத் சென்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐதராபாத் சென்ற அஜித் அங்கு இயக்குநர் பிரசாந்த் நீலை சந்தித்துள்ளாராம். முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக ஐதராபாத்திலும் ஒரு மீட்டிங் நடைபெற்றுள்ளதாம்.
அஜித் – பிரசாந்த் நீல் இடையேயான இந்த சந்திப்பில் ஏகே 64(AK 64) ப்ராஜெக்ட் உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து ஏகே 64 பற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகலாம் எனவும், அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இது கேஜிஎஃப் மூன்றாம் பாகமாகவோ அல்லது மூன்றாம் பாகத்திற்கான லீட்-ஆகவோ இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. அஜித் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய புகைப்படங்கள் வைரலான நிலையில், அதன் பின்னணி பற்றியும் இப்போது தெரியவந்துள்ளது.
What's Your Reaction?






