Today Horoscope: இன்றைய ராசிபலன் செப்டம்பர் 6 - சுக்கிரன் அருள் யாருக்கு தேடி வரும்

Today Horoscope Predictions in Tamil: வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் சுக்கிர பகவான் அருள் நிறைந்த நாள். இன்றைய தினம் சந்திரன் கேது, சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Sep 6, 2024 - 06:24
Sep 7, 2024 - 10:13
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் செப்டம்பர் 6 -  சுக்கிரன் அருள் யாருக்கு தேடி வரும்
Today Rasi Palan 2024

மேஷம்

சந்திரன் ஆறாம் வீட்டில் சுக்கிரன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

ரிஷபம்

சந்திரன் 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும்.

மிதுனம்

சந்திரன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.

கடகம்

சந்திரன் 3ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.  பணப்பிரச்சினைகள் நீங்கும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

சந்திரன் உங்களுடைய ராசியில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்வதால் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் மனஸ்தாபங்கள் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி பெற பொறுப்புடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துகளை விற்பதில் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

சந்திரன் இன்று லாப வீட்டில் சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.

தனுசு

சந்திரன் இன்று பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.

மீனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு நேர் எதிரே அமர்ந்து பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow