வாஸ்து டிப்ஸ்.. பூஜை அறை எந்த திசையில் இருக்க வேண்டும்? - மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்

நம்முடைய வீட்டில் பூஜை அறை வைக்கும் போது சில சம்பிரதாயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.எந்த திசை வாசல் உள்ள வீட்டில் எந்த திசையில் பூஜை அறை வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Sep 5, 2024 - 16:00
Sep 6, 2024 - 09:58
 0
வாஸ்து டிப்ஸ்.. பூஜை அறை எந்த திசையில் இருக்க வேண்டும்? - மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்
vastu tips pooja room

 

நம்முடைய வீட்டில் சமையல் அறை,படுக்கை அறை என பல அறைகள் இருந்தாலும் மன அமைதிக்காக சில நிமிடங்கள் பூஜை அறையில் நேரம் செலவு செய்வோம். அந்த பூஜை அறையை சரியான இடத்தில் சரியான திசையில் அமைக்க வேண்டும். எந்த திசையில் பூஜை அறையை வைத்தால் எந்த மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

ஜோதிட சாஸ்திரப்படி பூஜை அறையை எந்த திசையில் அமைக்க வேண்டும் என்றும் அதில் எந்த திசையில் சாமி படங்களை வைக்க வேண்டும். கதவு முதல் பூஜை பொருட்கள் வரை எந்த திசையில் வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மன நிம்மதியும் மகிழ்ச்சியும் தரக்கூடிய பூஜை அறையை நாம் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதற்கு சில விதிமுறைகள் உள்ளது. 

வடகிழக்கு திசை ஈசான்ய மூலை பகுதியில் பூஜை அறை அமைப்பது சிறப்பானது. அப்படி ஈசான்ய மூலை பகுதியில் பூஜை அறை அமைக்க முடியாதவர்கள் வடக்கு திசை அல்லது கிழக்கு திசையில் பூஜை அறை அமைக்கலாம்.

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்க வேண்டும். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும்.பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.

பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.இதன் மூலம் இறை அருள் நிறைந்திருக்கும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.

சில வீடுகளில் இடப்பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவார்கள். அப்படி வைத்திருக்கும் பட்சத்தில் சாமி கும்பிடும் நேரம் தவிர பூஜை அறை அலமாரியை மூடி வைக்க வேண்டும். 

கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மாடிப்படிகளின் கீழ் பூஜை அறையை அமைக்கக் கூடாது.

பூஜை அறையை வழிபடுவதற்கும் தியானம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.பூஜை அறையில் மந்திர உச்சாடனங் களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும். 

பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.காய்ந்த பூக்களை உடனுக்கு உடன் முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை வைக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow