Today Horoscope: இன்றைய ராசிபலன் செப்டம்பர் 3 - செல்வம் யாருக்கு பெருகும்?

Today Horoscope Predictions in Tamil: செவ்வாய்க்கிழமையான இன்றைய தினம் முருகப்பெருமானின் அருள் நிறைந்த நாள். இன்றைய தினம் சந்திரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Sep 3, 2024 - 06:04
Sep 4, 2024 - 10:12
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் செப்டம்பர் 3 -  செல்வம் யாருக்கு பெருகும்?
Today Rasi Palan 2024

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 18ஆம் நாள் செப்டம்பர் 03ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அமாவாசை திதி காலை 07.25 மணி வரை அதன்பின் பிரதமை திதி. பூரம் நட்சத்திரம் இரவு 03.10 மணி வரை அதன் பின் உத்திரம் நட்சத்திரம். இன்று சந்திரபகவான் அருளினாலும் சந்திரன் பயணத்தாலும் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

மேஷம்

இன்று உங்களுடைய உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் நன்மைகள் நடைபெறும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் நன்மைகள் நடைபெறும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

ரிஷபம்

நான்காம் வீட்டில் சந்திரன் பயணம் செய்வதால் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் போது சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. பிள்ளைகள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.

மிதுனம்

3ஆம் வீட்டில் பயணம் செய்யும் சந்திரனால் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பொன் பொருள் சேரும்.

கடகம்

இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சந்திரனால் பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவைப்படும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். 

சிம்மம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் கிட்டும். திருமண சம்பந்தமான முயற்சிகள் நற்பலனை தரும். செலவுகள் குறையும்.

கன்னி

இன்று உங்களுக்கு வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் டென்ஷனை ஏற்படுத்தும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். எதிர்பாராத உதவி கிட்டும்.

துலாம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பொன் பொருள் சேரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

தனுசு

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அலுவலகத்தில் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை. மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள் பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். 

கும்பம்

இன்று வியாபாரத்தில் உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

இன்று மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். வீட்டில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சிக்கனமுடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வீட்டுத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow