Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20 - சந்திராஷ்டமத்தால் சங்கடம் யாருக்கு?

Today Horoscope Predictions in Tamil: செவ்வாய் பகவானின் அருள் நிறைந்த செவ்வாய்க்கிழமையான இன்றைய தினம் சந்திரன் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 20, 2024 - 06:18
Aug 20, 2024 - 21:57
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20 - சந்திராஷ்டமத்தால் சங்கடம் யாருக்கு?
Today Rasi Palan 2024

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 04ஆம் நாள் ஆகஸ்ட் 20ஆம் தேதி செவ்வாய்கிழமை பிரதமை திதி இரவு  08.33 மணி வரை அதன் பின் துவிதியை. சதயம் நட்சத்திரம் நள்ளிரவு 03.09 மணி வரை அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம். சந்திரன் பயணத்தால் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். கயாத்ரி ஜபம் தினமான இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம்?கவனமாக இருக்க வேண்டியது யார் என்று பார்க்கலாம். 


மேஷம்

சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணிக்கிறார். இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.

ரிஷபம்

சந்திரன் பத்தாம் வீட்டில் பயணிக்கிறார். இன்று உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

மிதுனம்

சந்திரன் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கிறார். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகை கடன் வாங்க நேரிடும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே அனுகூலப் பலன் கிட்டும். கடந்த 2 நாட்களாக ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். 

கடகம்

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணிக்கிறார். இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. எந்த செயலிலும் கவனம் தேவை.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணிக்கிறார். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பிசினஸ் பார்ட்னர்களால் நன்மை ஏற்படும். இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் நன்மை ஏற்படும்.

கன்னி

சந்திரன் ஆறாம் வீட்டில் பயணிக்கிறார் இன்று பிள்ளைகளால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால்  எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணிக்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும் பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும் உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.

விருச்சிகம்

சந்திரன் இன்றைக்கு நான்காம் வீட்டில் பயணிக்கிறார். வேலை செய்யும் இடத்தில் வெற்றிகள் தேடி வரும். தொழில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினை தீரும் மனக்கசப்பு மாறும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.  உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். 

தனுசு

சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீட்டில் பயணிக்கிறார். நீங்கள் இன்று மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.

மகரம்

சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணிக்கிறார். இன்று வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் எச்சரிக்கை தேவை. பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். கடின உழைப்பின் மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சிக்கனமாக செலவு செய்வதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம்.

கும்பம்

சந்திரன் உங்க ராசியில் பயணிக்கிறார். இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். பிள்ளைகள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் ஏற்படும். உயரதிகாரிகளின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.

மீனம்

இன்று உங்களை தேடி வீண் பிரச்சினைகள் வரலாம். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow