மழை வரப்போகுதே..குட் நியூசுடன் வந்த சென்னை வானிலை மையம்

கடுமையான வெயிலால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழ்நாட்டு மக்களை குளிர்விக்கும் விதமாக தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Aug 20, 2024 - 19:20
 0
மழை வரப்போகுதே..குட் நியூசுடன் வந்த சென்னை வானிலை மையம்


கடுமையான வெயிலால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழ்நாட்டு மக்களை குளிர்விக்கும் விதமாக தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டையும் அதன் மக்களையும் வெயில் கடுமையாக வாட்டி வந்த நிலையில், ஆக்ஸ்ட் 24ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று (ஆகஸ்ட் 20) தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும்  கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர்,  நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான  மழை  பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 21ம் தேதி தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி,  திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விஜய் தெரியும், மு.க.ஸ்டாலின்னா யாரு?.. பதக்கம் வென்ற வீராங்கனை கொடுத்த பதில்

ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என சென்னை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

”ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 23 வரை: மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய தென்கிழக்கு  அரபிக்கடல் பகுதிகள்,  கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய மத்தியகிழக்கு  அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு-மாலத்தீவு  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் ஆகஸ்ட் 24ம் தேதி மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய மத்தியகிழக்கு  அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow